ஆன்லைன் விளையாட்டால் திருடனாக மாறிய போலீஸ்!!

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த அமல்தேவ் கே.சதீசன் (35) என்பவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரும் அமல்தேவும் நண்பர்கள்.

இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் கூறினார். இதையடுத்து அமல்தேவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, நண்பர் வீ்ட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில், அமல்தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடிமையான அமல்தேவ் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கத் தொடங்கினர். இந்தநிலையில் கடனை அடைக்க தனது நண்பர் வீட்டில் திருடியுள்ளார். திருடிய நகைகளில் சிலவற்றை அப்பகுதியில் அடகு வைத்ததும், மீதி இருந்த நகைகளை விற்றதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.