திருமணத்திற்கு மறுத்த பள்ளி மாணவி.. திட்டம் போட்டு கொலை செய்த இளைஞர்கள்.!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் வசித்து வருபவர் பள்ளி மாணவி உஷா (வயது 16). இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்து சில நாட்களாக மாணவி பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 12ம் தேதி மாணவி உஷா காணாமல் போய் உள்ளார்.

இதனையடுத்து மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிரி வீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆராமணி ஏரியில் மாணவி உஷாவின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதிரிவேடு போலீசார் ஏரியில் மிதந்து கிடந்த மாணவி உஷா உடலை கைப்பற்றினார்.

இதனையடுத்து மாணவி உஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முக்கரம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனையும் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாணவிக்கும் பிரவீன் என்ற இளைஞனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகவும் திருமணம் செய்ய சொல்லி பிரவீன் கட்டாயப்படுத்தியதால் மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் பிரவீன் சிறுவனுடன் சேர்ந்து மாணவியை தலையில் கட்டையால் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரியில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.