புதுடில்லி : புதுடில்லியில், ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து, மர்ம நபர்கள் பர்சை பறித்ததில், அவர் கீழே விழுந்து நேற்று உயிரிழந்தார்.
புதுடில்லியில் துணிக்கடை நடத்தி வந்த சுமித்ரா மிட்டல், 56, என்ற பெண், தனது சகோதரரை பார்ப்பதற்காக, பிரசாந்த் விஹார் பகுதியில் நேற்று ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், சுமித்ராவிடம் இருந்து பர்சை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் பர்சை இறுக்கமாகப் பிடித்தபடி போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், பலமாக இழுத்ததில், ஓடும் ஆட்டோவில் இருந்து சுமித்ரா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement