அக்னிபாத் திட்டத்துக்கு இன்று முதல் ஆள்சேர்ப்பு தொடக்கம்!

இந்திய ராணுவத்தின் “அக்னிபாத்” திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு இன்று தொடங்குகிறது.
முன்னதாக அக்னிவீர் வாயு திட்டம் மூலம்  இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 23 (பிற்பகல் 5 மணி வரை) என்றும், இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
image
இதற்கு 2002 ஜூன் 27க்கும் 2005 டிசம்பர் 27க்கும் இடையே (இரண்டு தேதிகளும் நீங்கலாக) பிறந்த, திருமணமாகாத ஆண்களும் பெண்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர் என்று அரசு தெரிவித்திருந்தது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என பாதுகாப்புத்துறை அலுவலகப் பிரிவு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி இந்திய ராணுவம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு இயக்கம் இன்று தொடங்கி நவம்பர் 29 வரை நடைபெற உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.