What To Watch: 'கர' முதல் 'பேட்ரியாட்' வரை! – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!

கர – தமிழ்:

ஐசரி கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கியுள்ள ‘கர’ திரைப்படத்தில் தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார், பிரித்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kara Review | கர விமர்சனம்
Kara Review | கர விமர்சனம்

பேட்ரியாட் – மலையாளம்

மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படம் மம்மூட்டி, மோகன்லால், பகத் பாசில், நயன்தாரா, ரேவதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் இது.

ஜெட்லி – தெலுங்கு:

ரித்தீஷ் ரானா இயக்கிய படம் ‘ஜெட்லி’. சத்யா, ரியா சிங்கா, வெண்ணிலா கிஷோர், விவா ஹர்ஷா, கபிர் துகன் சிங் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Ek Din
Ek Din

ஏக் தின் – இந்தி: ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுனில் பாண்டே இயக்கத்தில், ஆமீர் கானின் மகன் ஜுனைத் கான், சாய் பல்லவி, குணால் கபூர் ஆகியோர் இணைந்து நடித்த ‘ஏக் தின்’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தி டெவில் வியர்ஸ் பிராடா 2 – ஆங்கிலம்

‘தி டெவில் வியர்ஸ் பிராடா’ திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டேவிட் ஃப்ராங்கள் இயக்கத்தில் மேரில் ஸ்ட்ரீப், ஆன் ஹாத்வே, எமிலி பிளண்ட், ஸ்டான்லி துச்சி ஆகியோரின் நடிப்பில் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

TN 2026
TN 2026

ஓ.டி.டி ரிலீஸ்:

க்ளோரி (Glory) – Netflix

டிஎன் 2026 (TN 2026) – Amazon Prime Video / Aha

முஸ்தபா முஸ்தபா (Mustafa Mustafa) – Aha

ஆடு 3 (Aadu 3) – ZEE5

தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond) – ZEE5

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.