தனுஷ்கோடி வந்த 10 அகதிகள்

ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல் அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 187 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இலங்கை மன்னார் பகுதியின் 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் என 10 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இவர்களை நேற்று காலை தனுஷ்கோடி மெரைன் போலீஸார் விசாரணை செய்து, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி … Read more

அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் ரயில் விபத்தில் மரணம்

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கார் மீது ரயில் மோதியதில் இலங்கையர் ஒருவர் பலியானார். அவருடன் காரில் இருந்த மற்றோரு இலங்கையர் உயிர் தப்பினார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Edna நகரத்தில் வசித்து வந்த இலங்கையரான 45 வயது நாலக மனோஜ் சில்வா கவிரத்னா (Nalaka Manoj Silva Kavirathna), மற்றும் ஒரு இலங்கை நபர் சென்ற கார் மீது ரயில் மோதி விபத்துக்குதானது. இந்த சம்பவம் விக்டோரியா மாகாணத்தின் Inez நகத்தில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை … Read more

கரு கலைந்ததை உறவினர்களிடம் தெரிவிக்காமல் 9 மாத கர்ப்பிணி போல் நடித்து பிரசவத்திற்கு வந்த இளம்பெண்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சிதம்பரம்:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவர் இரண்டு முறை கர்ப்பமாகி, கரு கலைந்து விட்டது. இதையடுத்து மூன்றாவது முறையாக கருவுற்றார். அதன்பின் அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க சென்று விட்டார். இந்நிலையில் மூன்றாவது முறையாக கரு கலைந்து போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்பெண் தவித்துள்ளார். இந்த விவரம் கணவர் குடும்பத்தினருக்கு தெரிந்தால் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் என்ற … Read more

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் பாஜவில் ஐக்கியமா?: ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பாஜ.வில் சேருகிறாரா? என்று கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் சட்ட விரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில், இவருடைய வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், ரூ. 4.81 கோடி சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், … Read more

கரன்ஸ் காரின் விலை 2வது முறையாக அதிகரிப்பு| Dinamalar

குருகிராம் : கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கியா’ நிறுவனத்தின்,எம்.பி.வி., காரான ‘கரன்ஸ்’ காரின் விலை, இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வகை கார்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரையிலும்; டீசல் வகைக்கு 30 ஆயிரம் ரூபாய்முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரன்ஸ் காரின் காத்திருப்பு நேரம், மற்ற எம்.பி.வி., வகை கார்களை விட மிக அதிகமாக, 75 வாரங்கள் வரை நீடிக்கவும் செய்கிறது. குருகிராம் : … Read more

ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம்

கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் இன்று (06) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்,  அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போதையில் காரில் உறங்கிய டிரைவருக்கு ரூ.10,000 அபராதம்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் மெய்யப்பன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தேவகோட்டைக்குச் செல்வது என்றால் சென்னையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் வாடகை காரில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி தேவகோட்டையில் இருந்து கோவிலுக்கு செல்வதற்காக சக்திவேலின் காரை முன் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2ம் தேதி புறப்பட்ட சக்திவேல் தேவக்கோட்டையை சென்றடைய இரவு 10:30 மணி ஆகிவிட்டது. மறுநாள் காலை ஏழு மணிக்கு தான் … Read more

அடுத்த ஆண்டு ஜன.16 முதல் 18-ம் தேதி வரை சென்னையில் பன்னாட்டு புத்தக காட்சி: அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18-ம்தேதி வரை சென்னையில் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பொது நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் சங்கர சரவணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனிக்கு சென்று, அங்கு நடைபெற்ற ‘பிராங்பேர்ட்’ புத்தகக் கண்காட்சியை ஆய்வு செய்துஅரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதேபோல, பன்னாட்டு புத்தகக் காட்சியை தமிழகத்தில்நடத்தவும் … Read more

பெண் எஸ்ஐக்கு டார்ச்சர் இன்ஸ்பெக்டரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

விருத்தாசலம்: நெய்வேலி காவல் நிலையத்தில் பெண் எஸ்ஐயாக இருப்பவர் ஆதி. இவர் 4 மாதத்திற்கு முன்பு  ஆலடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக உள்ள விஜயகுமார், ஆதியை திட்டுவதும், இரட்டை அர்த்தங்களில் பேசுவதுமாய் இருந்ததாக எஸ்ஐ ஆதி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.   தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகாரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்திற்குள் இந்த புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை … Read more

நிலச்சரிவால் புதைந்த மூணாறு எஸ்டேட்டில் நெகிழ்ச்சி கண் மூடிய பெற்றோரின் கனவை நிறைவேற்றிய செல்ல மகள்: விடாமுயற்சியுடன் படித்து எம்பிபிஎஸ் சேர்ந்தார்

மூணாறு: மூணாறு பெட்டிமுடி எஸ்டேட் நிலச்சரிவு பேரிடர் விபத்தில் அனைத்து உறவுகளையும் இழந்த மாணவி, விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் நீட்  தேர்வில் தேர்ச்சி பெற்று பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் 6. கொரோனாவிற்கு குலைநடுங்கி உலகமே தனிமையில் உறைந்திருந்த நேரம் அது. மூணாறு பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் பகல் முழுவதும் வேலையை முடித்துவிட்டு, மலைகள் சூழ, நடுவில் இருந்த சிறிய குடியிருப்புகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். … Read more