சமந்தாவிடம் நலம் விசாரித்த நாக சைதன்யா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார். அவர் விரைவில் நலமடைய பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். தன் சக நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. பிரிவுக்குப் பின் அந்த ஜோடி தங்களது திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா விரைவில் குணமடைய அவரது மைத்துனர் நடிகர் அகில் … Read more

இந்தியாவில் நடைபெற்ற முதலாவது தேர்தலில், வாக்களித்த வாக்காளர்

பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வாக்களிப்பில் முதன் முறையாகக் கலந்துகொண்டவர் என அடையாளப்படுத்தப்படும் Shyam Saran Negi காலமானார். இவர் அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார். இவரே இந்தியப்பொதுத் தேர்தலில் முதன் முறை அன்று முதலாவது வாக்காளராக  வாக்களித்தார். நேற்று காலமான இவர், ஹிமாச்சல்பிரதேசத்திற்கான தேர்தலில் இவ்வாறு வாக்களித்துள்ளார். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர்,இந்தியாவில் 1951ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தல், இவர் சார்ந்த பிரதேசதேர்தல் 5 மாதங்களுக்கு முன்பதாக நடைபெற்றுள்ளது. அக்காலப் பகுதியில் ஹிமாச்சல்பிரதேசத்தில் … Read more

விதிமீறல் கட்டிடங்கள் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக, அங்கு குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஆயிரம் சதுரஅடி கட்டுமானம் மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்றுவிட்டு, 12 ஆயிரம் சதுரஅடிக்கு கட்டுமானங்கள் … Read more

பால் விலை உயர்வு எதிரொலி… 15 ரூபாய் ஆகும் சிங்கிள் டீ!

மதுரை மாவட்ட காபி டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சங்கத்தின் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரேஸ், ‘ ஆவின் பால் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் பால் நிறுவனம் அரசு சேவை நிறுவனம் இதனை தனியார் பால் நிறுவனங்களோடு ஒப்பீடு செய்து பால் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. … Read more

வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் தரைப்பாலம்: தடுப்பு கட்டை அமைக்க கோரிக்கை

வடலூர்: வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மருவாய் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் தடுப்பு கட்டைகள் இன்றி உள்ளது. இதனால் மழைக்காலத்தில் இரவு நேரங்களில் சாலை தெரியாமல் வாகனங்கள் வாய்க்காலில் கவிழ்ந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் அதனை சரி செய்ய … Read more

இரட்டை இன்ஜின் அரசு மோசடி பாஜ.விடம் இருந்து மக்களை காப்போம்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: ‘குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பாஜ.வின் இரட்டை இன்ஜின் அரசு மோசடியில் இருந்து மக்களை காப்போம்,’ என ராகுல் காந்தி தெரிவித்தார். பாஜ ஆட்சி நடக்கும் குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. மும்முனை போட்டி நடக்கும் குஜராத்தில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரசாரத்தில் சூடு பறக்கிறது. இதனிடையே, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் … Read more

ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியாபட், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா என்ற வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஆலியா பட்டும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார் ஆலியா பட். அதன் பிறகு அவ்வப்போது தான் கர்ப்பிணியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் … Read more

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள்: பதிவு கால எல்லை நீடிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டத் திட்டத்தில் இதுவரையில் 9 ஆயிரத்திற்குமேற்பட்ட முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவு நடவடிக்கை இன்றுடன்நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சந்தர்ப்பத்தை மேலும் வழங்குவதற்காக பதிவு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசனின் தாயார் மறைவு – முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் (86), இன்று ஞாயிற்றுக்கிழமை 2022, நவம்பர் 6-ம் தேதி காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரின் மறைக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் … Read more

'மக்களின் நம்பிக்கையை இழந்த என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்' – அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழன் உள்ளிட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை பார்வையிடுவதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். என்.எல்.சிக்கு கடந்த காலங்களில் நிலம் கொடுத்த மக்கள் அனுபவிக்கும் வேதனை, நிலத்தை இழக்க … Read more