பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டிடங்களை இடித்துவிட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு: அமைச்சர் அன்பில் மகேஸ் 

தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் எங்கெல்லாம் பழுதடைந்து உள்ளதோ, அவற்றையெல்லாம் இடித்துவிடவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இரண்டு போக்குவரத்து வழித்தடங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். அந்த வழித்தடத்தில் சென்ற பேருந்தில் சிறிது தூரம் அமைச்சர் அன்பில் மகேஸ் அமர்ந்து பயணித்தார். அப்போது அவர், முதல்வரின் … Read more

மெகா கூட்டணி.. களத்தில் பாமக..? ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும் தற்போதும் தேசிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக உள்ளது என்றும் பாஜகவை சேர்ந்த எச். ராஜா அண்மையில் தெரிவித்தார். பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி இருப்பதை போல எச். ராஜா பேசியதாக அதிமுகவினர் கருதினர். இந்த சலசலப்புக்கு அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிமுக 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாமக்கல் அடுத்துள்ள பொம்மைக்குட்டை மேட்டில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும் அதிமுக … Read more

ஜெயலலிதா குடும்பத்தில் புதுவாரிசு – உறவினர்கள் மகிழ்ச்சி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. இவரின் கணவர் மாதவன். இவர்களுக்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அதற்குப் பல வருடங்களாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பல முறை குழந்தை பிறப்பதில் சிக்கல் நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் தீபாவிற்கு வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தீபா கூறுகையில், “5 வருடச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது எனக்குக் குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு … Read more

பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் – விஷால்

சென்னையை அடுத்து அமைந்திருக்கும் மாத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருமணம் செய்துவைத்தார். 11 ஏழை ஜோடிகளும் ஏற்கனவே காதல் செய்து வந்துள்ளனர். அதற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளித்ததால் விஷால் நற்பணி மன்றம் மூலம் திருமணம் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு 51 பொருள்களுடன் சீர்வரிசையையும் விஷால் வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய விஷால், “ எனக்கு குடும்பம் பெரிதாகிவிட்டது. 11 தங்கைகள் கிடைத்துள்ளனர். என் தங்கைகளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள … Read more

கம்பம் சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம்: கம்பம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் சொத்துக்கள் பதிவு செய்யும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப், சுருளியாறு மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்யுவும், வாங்கவும் பத்திரப்பதிவு செய்ய கம்பம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டும். பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள இந்த அலுவலகமானது ரோட்டைவிட பள்ளமான இடத்தில் இருக்கிறது. இதனால் மழை பெய்தால் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் பத்திரப்பதிவு … Read more

கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி

பீகார்: கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி பெற்றார். அதே தொகுதியில், அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி வேட்பாளர் 12,214 வாக்குகளையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,854 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: 200 ஆண்டுகளாக தொடரும் வழிபாடு

வாழப்பாடி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே வழிபடும் வனக்காவல் தெய்வமான அஞ்சாலன் குட்டை முனியப்பன் வினோத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில்; 150 ஏக்கரில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியின் நடுவில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. தற்போது இந்த வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சிலர், இவ்வழியே செல்லும் பொதுமக்களை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து … Read more

இவ்வளவு கோடி சொத்துக்களா? – அசரவைத்த திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கை

திருப்பதி திருமலா தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை வெளியிட்டு சொத்துப் பட்டியலை அறிவித்திருக்கிறது. அதில் நிலையான வைப்பு மற்றும் தங்கம் வைப்பு போன்ற அனைத்து தகவல்களையும் விவரமாக தெரிவித்திருக்கிறது. தற்போதைய அறக்கட்டளை வாரியம் 2019 முதல் முதலீட்டு வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளதாக TTD அறிவித்திருக்கிறது. மேலும், TTD-யின் தலைவர் ஆந்திர பிரதேச அரசின் பாதுகாப்பிற்காக திருப்பதி தேவஸ்தானத்தின் உபரி நிதியை முதலீடு செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகிவந்த தகவலையும் மறுத்திருக்கிறது. மேலும், உபரி நிதியை திட்டமிட்ட வங்கிகளில் முதலீடு … Read more

35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி! வெளியான மாஸ் அப்டேட்

மணிரத்னம் கதை எழுதி இயக்க கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும்  திரைப்படமாக நாயகன் இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் கூட அதன் பின்னர் மணிரத்னம் கமல்ஹாசன் ஜோடி அதன் பின்னர் இணையவில்லை. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப்பிறகு  கமல்ஹாசன் – மணிரத்னம் … Read more

இளைய தலைமுறையினரிடத்தில் வாசிப்பை ஊக்குவித்திருக்கும் பொன்னியின் செல்வன்: விக்ரம்

'பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று' வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் … Read more