கமல்ஹாசன் – மணிரத்னம் மெகா கூட்டணி அறிவிப்பு… கமலின் 234-வது படத்தை இயக்குகிறார் மணிரத்னம்…

கமல் நடிப்பில் மற்றுமொரு படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர். 35 ஆண்டுகளுக்கு முன் இருவர் கூட்டணியில் உருவான படம் நாயகன். இதற்கு பிறகு தற்போது கமலஹாசனின் 234 வது படத்தை இயக்க இருக்கிறார். Here we go again! #KH234பயணத்தின் அடுத்த கட்டம்! #ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM pic.twitter.com/ATAzzxAWCL — Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2022   இந்தப் படத்திற்கு … Read more

இன்றும், நாளையும் பவுர்ணமி கிரிவலம், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை முன்னேற்பாடுகளை: கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது இன்றும், நாளையும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப … Read more

உ.பி. கோலா கோக்ராநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி வெற்றி

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தின்  கோலா கோக்ராநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கோலா கோக்ராநாத் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 90,512 வாக்குக்கள் பெற்று தோல்வியடைந்தார்.

மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி!!

டெல்லி: தற்போது நாட்டு மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் அச்சிடப்பட்ட பணத்திலிருந்து வங்கியிடம் உள்ள தொகையை கழித்தால் மக்களிடம் உள்ள தொகை தெரியவரும். 2016, நவ.4-ல் நிலவரப்படி ரூ.17.97 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் பொதுமக்களிடம் இருந்தது. 2016 நவ.8-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் கைகளில் இருந்த ரொக்கப்பண மதிப்பு 2017 ஜனவரியில் ரூ.7.8 … Read more

புதிய பார்லி., கட்டுமான பணி: மத்திய அமைச்சர் தகவல்| Dinamalar

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டுமானப் பணிகள் வேகமாக நடப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு பதிலாக புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கு, 2020 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற இந்த திட்டத்தின் கீழ் புதிய பார்லிமென்ட், மத்திய அரசு செயலகம், பிரதமர் அலுவலகம், ராஜபாதை சீரமைப்பு ஆகிய பணிகள் நடக்கின்றன.கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் … Read more

விக்ரம் படத்தில் கிடைத்த 'சர்ப்ரைஸ்' : நடிகர் ஜாபர்சாதிக்

'பாவக்கதைகள்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் 'ராவுத்தர்' கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடன இயக்குனரும், நடிகருமான ஜாபர் சாதிக். அவர் அளித்த பேட்டி… ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்தேன். எதிர்காலம் சினிமாத்துறை என தீர்க்கமாக இருந்ததால் கல்லுாரிக்கு செல்லவில்லை. இயக்குனர் விக்னேஷ்சிவன் குழுவில் உள்ள நண்பர் மூலம் 'பாவக்கதைகள்' நடிகர்கள் தேர்வு ஆடிஷனில் பங்கேற்று தேர்வானேன். அதில் நான் நடித்த 'லவ் பண்ண விட்றணும்' வசனம் பாப்புலர் ஆகிவிட்டது. … Read more

சித்திரவதை செய்து உயிரைக் குடிக்கும் Gympie-Gympie செடியை ஆசையாய் வளர்க்கும் நபர்!

வாழ்க்கையில், போர் அடிப்பதாக இருந்தாலோ, அல்லது அலுப்பாக இருந்தாலோ, பெரும்பாலானோர் மனதிற்கு பிடித்த காரியங்களை செய்வார்கள். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒரு அதிசய நபர், தனக்கு வாழ்க்கை ரொம்ப போராக இருப்பதால், மிகவும் ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார். ரிஸ்க் என்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போல உள்ளதாக தெரிகிறது. பல ஆபத்தான மற்றும் கொடிய தாவரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Gympie-Gympie என்ற தாவரமானது உலகிலேயே மிகவும் ஆபத்தான தாவரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், … Read more

தனியே கழண்டு ஓடிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள்!!

சென்னையில் இருந்து கோவைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும். இந்நிலையில் நேற்று இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இரவு 11 மணியளவில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சென்றபோது திடீரென பயங்க சத்தத்துடன் பெட்டிகள் துண்டிக்கப்பட்டன. எஸ் 7 மற்றும் எஸ் 8 … Read more

கோவில்பட்டியில் கார் வைத்திருப்பவருக்கு, சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக ஃபைனா?!

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2018-ல் தனது நண்பர் கோபால்சாமி மற்றும் இருவருடன் காரில் கோவில்பட்டி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வெள்ளையாபுரத்திற்கு சென்றார். அப்போது போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலைமணி (தற்போது ஆய்வாளர்), காரை மறித்து ஆவணங்களை ஆய்வு செய்தார். இதில் காரில் உள்ளவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

கள்ளக்குறிச்சியில் அமைதியாக நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி; 364 பேர் பங்கேற்பு: பாதுகாப்பு பணியில் 1300 போலீஸார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் 364 பேர் பங்கேற்றனர். ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாள் விழா, மகாத்மாகாந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, 75-வது சுதந்திர தினவிழா எனும் முப்பெரும் விழாவை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில் அரசு அனுமதி மறுத்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப் படி கள்ளக்குறிச்சி, … Read more