வெளிநாட்டுக்கு சென்ற த்ரிஷாவுக்கு கால் கட்டு – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி சமீபத்தில் வெளியானது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் படமானது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கல்கி படைத்த குந்தவைக்குரிய ராஜ தந்திரத்தையும், கம்பீரத்தையும் அப்படியே த்ரிஷா திரையில் பிரதிபலித்ததாக … Read more

ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் – விசாரணைக்கு உத்தரவு

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் அதில் இருந்தன. இரவு 11 மணியளவில் ரயிலானது திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடை வழியாக சென்றது. அப்போது ரயிலின் S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின. … Read more

"`ஜவான்' படம் `பேரரசு' படத்தின் காப்பியா?"- அட்லிக்கு எதிராகப் புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர்!

இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’, ‘நண்பன்’ ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லி, 2013-ம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராகத் திரை உலகுக்கு அறிமுகமானார்.  ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், சத்யன் என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துப் படத்தை இயக்கிய இவருக்கு விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தற்போது இந்தியில் ‘ஜவான்’ படத்தை … Read more

ரயில் நிலையத்தில் Poppiesகளை விற்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: வைரலாகும் வீடியோ காட்சி

வெஸ்ட்மின்ஸ்டர்  நிலையத்தில் பாப்பிகளை விற்ற பிரதமர் ரிஷி சுனக். தனது நேரத்தை தாராளமாக வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெஸ்ட்மின்ஸ்டர்  நிலையத்தில் பாப்பிகளை (Poppies) விற்று பயணிகளை ஆச்சரியப்படுத்தினார். ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு பணம் திரட்ட, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர் ஸ்டீபன் லு ரூக்ஸுடன் இணைந்து பாப்பிகளை விற்றார். வெஸ்ட்மின்ஸ்டர்  நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வந்த பிரதமர் ரிஷி சுனக், தட்டில் … Read more

1037-வது சதய விழாவில் நினைவுகூர்ந்து ராஜராஜசோழன் படத்தை முதுகில் டாட்டூவாக வரைந்த சேலம் வாலிபர்; வரலாற்று சாதனையை மறைக்க முடியாது என நெகிழ்ச்சி

சேலம்: சேலத்தில் தஞ்சை பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழனின் படத்தை, சேலம் வாலிபர் முதுகில் டாட்டூவாக வரைந்துள்ளார். அவரது 1037வது சதய விழாவில் வரலாற்று சாதனையை மறைக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறினார். சோழ தேசத்தை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன், காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி வைத்துள்ளார். அவரது நினைவை பறைசாற்றும் வகையில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், அக்கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதனை பார்த்து வரலாற்று அறிஞர்களும், வெளிநாட்டினரும் இன்றைக்கும் … Read more

டி20 உலகக் கோப்பை: 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி

மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61*, கே.எல்.ராகுல் 51 ரன்கள் எடுத்தனர்.

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் முறைகேடு; பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு; மாஜி ஐஜி: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி-யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த … Read more

"யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது" – திமுக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும், ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என நாமக்கலில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாமக்கல் அடுத்துள்ள பொம்மைக்குட்டை மேட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

இனோவா ஹைகிராஸ் நவம்பர் 25ல் அறிமுகம்| Dinamalar

பெங்களூரூ,’டொயோட்டா’ நிறுவனம், அதன் புதிய ‘இனோவா ஹைகிராஸ்’ எம்.பி.வி., காரை, நவம்பர் 25ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த காருக்கான அறிமுக டீசரை, இந் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில், காரின் முன்பாகம் மட்டும் காட்டப்பட்டிருந்தது. உலகளவில் விற்பனையில் இருக்கும் ‘கொரோலா கிராஸ்’ எஸ்.யு.வி., காரில் இருப்பதைப் போன்ற ஹெக்ஸகனல் க்ரில், இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது, காரின் பிரமாண்ட உருவத்தை பதிவு செய்கிறது. இந்த கார், டொயோட்டாவின் பிரத்யேக டி.என்.ஜி.ஏ., – … Read more

கீர்த்தி சுரேஷ் – ஜான்வி கபூர் திடீர் சந்திப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பரவலாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நடித்த வாசி படத்தை அடுத்து தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் ஸ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை சந்தித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். … Read more