Month: November 2022
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி: எடப்பாடி பழனிசாமி உறுதி
நாமக்கல்: நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேடு பகுதியில், அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்துகொண்ட அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தோன்றியதிலிருந்து இன்றுவரை தமிழகம் ஏற்றம் பெறுவதற்காக ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்தினோம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், இந்த இயக்கம் அழிந்துவிடும், சிதைந்துவிடும் என்று கனவு … Read more
3 பதவிகள், 2 பாதிப்புகள்… எடப்பாடி பிளான் குளோஸ்… மாட்டிக்கிட்டு தவிக்கும் அதிமுக ர.ர.,க்கள்!
ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவுடன் தலைமை பொறுப்பிற்கான நாற்காலியை பிடித்துவிட்டதாக கூறி வருகிறார். ஆனால் நீதிமன்றத்தை நாடி ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கலைத்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு எடப்பாடியின் கை ஓங்கியிருக்கிறது. ஏனெனில் கட்சியின் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. பின்னடைவை சந்தித்து வருகிறார். அவர் பக்கம் நிர்வாகிகள் வெகு சிலரே இருக்கின்றனர். அவ்வப்போது தொண்டர்கள் படை நேரில் … Read more
உயர் சாதி ஏழைகள் இட ஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது?
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படது. அவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த … Read more
இந்தியா வந்த சிறுத்தை… கலைந்தது கர்ப்பம் – நடந்தது என்ன ?
இந்தியாவில் சிறுத்தை (Cheetah) இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ஆம ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்பு காரணமாக சிறுத்தை இனம் இந்தியாவில் அழிவை கண்டது. ஆசியாவிலேயே இந்தியாவில் மட்டும் காணப்பட்ட இந்த சிறுத்தை இனம் அழிந்து சுற்றுச்சுழலின் உணவு சங்கலி பாதிக்கப்பிற்கு உள்ளாகலாம் என சூழலியல் வல்லுநர்கள் கூறி வந்தனர். இதை தொடர்ந்து, அரை நூற்றாண்டுகள் கழித்து இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனத்தை கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி ‘Project Cheetah’ என்ற திட்டத்தை, … Read more
உலகநாயகன் – ஹெச்.வினோத் காம்போ… இன்று வெளியாகிறது அறிவிப்பு?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து வேற்று மொழி படங்கள் ஹிட்டடித்துக்கொண்டிருந்த சமயத்தில் விக்ரம் படத்தின் வெற்றி கோலிவுட்டுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அந்த வெற்றியும், உத்வேகமும் கொடுத்த உற்சாசகத்தில் கமல் ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகினார். அந்தவகையில் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது. தற்போது இந்தியன் 2விலும், பிக்பாஸிலும் கமல் ஹாசன் பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து விக்ரம் 2 படம் ஆரம்பிக்கப்படுமா என ரசிகர்களிடம் … Read more
சிலந்திகள் நீங்கள் சிங்கங்கள் நாங்கள் – முரசொலிக்கு தமிழிசை பதிலடி
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுகவும், கூட்டணி கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டிருக்கின்றன. இதற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார். இதனையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் மற்ற மாநில ஆளுநராக இருந்துகொண்டு தமிழக விவகாரம் குறித்து கருத்து கூறுவதை விமர்சிக்கும்விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. … Read more
குமரி விசைப்படகு மீது நடுக்கடலில் வெடிகுண்டு வீச்சு; 51 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி: குமரி விசைப்படகு மீது நடுக்கடலில் வெடிகுண்டு வீசப்பட்டது. கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. தொடர் மழை காரணமாக ஒருசில விசைப்படகுகளே தற்போது மீன்பிடிக்க சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் சின்னமுட்டத்தை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மாலை 5 மணியளவில் சின்னமுட்டத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் … Read more
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி
அடிலெய்டு: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தானி முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
`அந்த வீடியோ பார்த்து…’ – சிறுமி பாலியல் வன்கொடுமையில் 10 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்
உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவனொருவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவுசெய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுவன் மீது, போக்ஸோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் சிறார் நீதிமன்றக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, … Read more