பால் வடியும் வேப்பமரம்.. பூஜை செய்து வணங்கும் பொதுமக்கள்.!

எட்டயபுரம் அருகே பால் வடிந்த வேப்பமரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்ப மரத்தில் கடந்த 3 நாட்களாக பால் போன்ற திரவம் வெளியேறி வந்திருக்கிறது. இதனை அப்பகுதியாக சென்ற கிராம பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆர்வத்துடன் பார்த்துள்ளனர். மேலும் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை கண்ட பொதுமக்கள் இது கடவுளின் ஆசி என நம்பியுள்ளனர். அதனைத் … Read more

ரூ.2 கோடி ஒதுக்கீடு; ரூ.12 லட்சம் மட்டுமே செலவு செய்ததால் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததா..?

குஜராத்தில் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, கடந்த வாரம்தான் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்குள் விபத்து நேரிட்டுள்ளது. இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க முடியும். ஆனால், விபத்து நேரிட்டபோது 500-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு, பாலம் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை பாலத்தில் அனுமதித்துள்ளனர். இதனால், பாரம் தாங்காமல் பாலம் உடைந்து … Read more

சூதாட்ட புகார்: ஐ.பி.எஸ் அதிகாரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தோனி! – பின்னணி என்ன?

கடந்த 2013-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் தொடரில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தோனி கடந்த 2014-ம் ஆண்டு சம்பத்குமார் தன் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் … Read more

கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.50லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 50லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது. வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த  கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில் ரகசிய அறையில் குட்கா இருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2பேரை கைது செய்தனர். Source link

உ.பி.யின் மைன்புரி மக்களவை மற்றும் 5 பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி மக்களவைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உ.பி.யின் மைன்புரி தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த மாதம் காலமானார். இதனால் காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

நம்பர் 311 என்னாச்சு… சிக்னல் கொடுப்பாரா ஸ்டாலின்? அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் பிளான்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009ஆம் ஆண்டிற்கு பின்பு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை குறிக்கோள் என்பது … Read more

ரஞ்சிதமே… ரஞ்சிதமே… கவனம் ஈர்த்த பாடகி… யார் இந்த மானசி?

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். … Read more

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மீது என்.ஐ.ஏ.குற்றப் பத்திரிகை தாக்கல்..!

சர்வதேச தீவிரவாத இயக்கத்தை நடத்தியதாக தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டி கம்பெனி என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி இந்தியாவில் குற்றம் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தாவூத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாவூத் இப்போது தலைமறைவாக உள்ளார். இதே போன்று தாவூத்தின் சகோதரர் இப்ராகிம் காஸ்கர், சோட்டா ஷகீல், மற்றும் தீவிரவாத செயல்களுக்காக ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கைது … Read more

கமிலா மீண்டும் சார்லஸ் வசம் வர முக்கிய காரணமே அவரின் முதல் கணவர் தான்! உண்மை தகவல்

கமிலாவின் முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் குறித்த தெரியாத தகவல்களை வெளியிட்ட நிபுணர். கமிலா சார்லஸுடன் மீண்டும் இணைய அவரே முக்கிய காரணம் என்கிறார். முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் தான் கமிலா மீண்டும் சார்லஸ் உடன் இணைந்ததற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார் அரச நிபுணர் பெட்ரோனிலா வயட். இது தொடர்பாக டைய்லி மெய்ல் பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ளார். அதன்படி கமிலாவின் தற்போதைய ராணி என்ற நிலைக்கே ஆண்ட்ரூ ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறார் என … Read more

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகளின் இணைப்பு துண்டாகி விபத்து

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதையடுத்து, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். சென்னை – கோவை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 10.10 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திருவள்ளூர் … Read more