139 தொகுதியில் வெற்றி பெற்று குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும்: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

அகமதாபாத்: குஜராத் தேர்தலில் 139 சீட்களுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பாஜ ஆட்சி மீது குஜராத் மக்கள் அதிருப்தி … Read more

சிறுமியருக்கு செக்ஸ் டார்ச்சர் முதியவருக்கு காப்பு| Dinamalar

துர்க்:சத்தீஸ்கரில், பள்ளி சிறுமியர் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த முதியவரை, போலீசார் நேற்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சத்தீஸ்கரின், துர்க் மாவட்டத்தில் உள்ள ஆசாராம் பாபு நகரில், ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு பயிலும் சிறுமியர் இருவர், ஆசிரியர் வீட்டுக்குச் சென்று டியூஷன் படித்து வந்துள்ளனர். அங்கு, ௬௦ வயதாகும் ஆசிரியரின் தந்தை, இந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்த புகாரின்படி, போலீசார் முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட … Read more

துபாயில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா?

'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது . வம்சி இயக்கத்தில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ், சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், குஷ்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தின் … Read more

இந்தியர்கள் திறமையானவர்கள் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்| Dinamalar

மாஸ்கோ,’இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள்; வளர்ச்சியில் இந்தியா மிகப் பெரும் சாதனைகளை படைக்கும்’ என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்யாவின் ஒற்றுமை தினத்தையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே, ‘டிவி’ வாயிலாக உரையாற்றினார். அப்போது, ரஷ்யாவின் பெருமை, சிறப்புகள் குறித்தும், மற்ற நாடுகள் குறித்தும் தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார். இந்தியா குறித்து தன் பேச்சில் அவர் குறிப்பிட்டதாவது:காலனி ஆதிக்கத்தின்போது, ஆப்ரிக்கா பெரிய அளவில் சூறையாடப்பட்டது. அவ்வாறு சூறையாடப்பட்ட வளத்தினாலேயே, … Read more

#Breaking :: தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  1) தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 2) தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருந்த ராஜேஸ்வரன் நெல்லை ஜங்ஷன் சரக உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 3) காத்திருப்போர் பட்டியல் இருந்த வினோஜி விருதுநகர் மாவட்ட சாத்தூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

06.11.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 06 |இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கார் வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் உள்ள 6 பேரை புழல் சிறைக்கு மாற்ற திட்டம்

கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். 6 பேரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் … Read more

சரியும் எடப்பாடி கோட்டை.. ஓபிஎஸ் – பாஜக உச்சகட்ட சூழ்ச்சி.? கைவிடும் பெரும் புள்ளிகள்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் வர முடியாது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. தற்போது பெய்து வரும் மழையால் ஸ்மார்ட் சிட்டி தண்ணீரில் மிதக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கொள்ளை அடித்து … Read more

நாகரிகமாக ஆடை அணிய வேண்டும் கரகாட்டத்தில் ஆபாச பாடல் நடனம் இடம் பெறக்கூடாது: கட்டுப்பாடுகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை:  மதுரை மாவட்டம் மேலப்பட்டியைச் சேர்ந்த மாரிச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் 8ம் தேதி இரவு கரகாட்டம் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இதற்கு அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் பிறப்பித்த உத்தரவு: ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள், அநாகரிகமான வார்த்தைகள் இடம் பெறும் வகையில் பாடல்களை ஒலிபரப்பக் … Read more

துணிவு படத்தில் அனிருத் பாடல்

சென்னை: அஜித்தின் துணிவு படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அஜித், மஞ்சு வாரியர் நடிக்கும் படம் துணிவு. வினோத் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு …