கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக் கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வருகிற 8 ஆம் தேதி இரவு … Read more

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு ஷாக் உத்தரவு!

கேரள மாநிலத்தில் பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் தவிர 122 பொதுத் துறை நிறுவனங்கள், 6 நிதிக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more

பரத் மிகச்சிறந்த நடிகர் – 'மிரள்' பட நிகழ்ச்சியில் வாணி போஜன்

‘Axess Film Factory’ டில்லி பாபு, தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’. இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டையொட்டி … Read more

உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் – கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகளுக்கு சிறப்பான பாரம்பரியம் உண்டு. குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் M.கல்யாணசுந்தாம். பி. ராபமூர்த்தி போன்றவர்கள் தலைமையில், கண்ணியமாகவும், நாணயமாகவும் அரசியல் செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, நம்மை ஆளாக்கிய புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது அவருக்கு தோளோடு தோள் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் புடம் போட்ட தங்கங்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிலைமை உள்ளது. … Read more

கெஸ்ட் ரோலில் ரஜினி; ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் `லால் சலாம்' படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?

மீண்டும் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவதாரம் எடுக்க, லைகா தயாரிப்பில் இன்று ரஜினியின் அடுத்த இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலாவந்தன. அதன்படி, ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது லைகா. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராகக் களம் … Read more

இலங்கையில் இருந்து கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அங்கு வசிக்கும், தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகை தருகின்றனர். இன்று 3 மாத கைக்குழந்தையுடன் 10 பேர் தமிழகம் வருகை தந்துள்ளனர். இலங்கையில்   உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  மேலும் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்கள், இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால், அங்கிருந்து இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக … Read more

தஞ்சாவூரில் உரிய பராமரிப்பு இல்லாத மிகவும் பழுதடைந்த வீடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலர்கள் இடித்து அகற்றம்

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் உரிய பராமரிப்பு இல்லாத மிகவும் பழுதடைந்த வீடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலர்கள் இடித்து அப்புறபடுத்தி உள்ளனர். தஞ்சாவூர் மாநகட்சிக்கு உட்பட்ட கீழவீதி பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட மேலஅலங்கம், மேலவீதி, கீழவீதி, தெற்கு வீதி, உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உரிய முறையில் பராமரிக்கப்பட்டதா கட்டிடங்கள் மற்றும் வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் … Read more

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

சிட்னி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணியை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றதால் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறியது

தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூர்

உத்திரமேரூர்: சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூராக தொடங்கியுள்ளது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிதுள்ளது. குறிப்பாக உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த ெகாள்ளளவில் பாதியளவு நிரம்பியுள்ளது. தொடர்ந்து, பருவமழை தீவிரமடையும் நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதனால் விரைவில் ஏரி நிரம்பும் … Read more

பழங்குடியினருடன் நடனம் ஆடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு: வீடியோ வைரல்| Dinamalar

சிக்கிம்: இரண்டு நாள் சுற்று பயணமாக சிக்கிம் சென்றுள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிக்கிம் அரசால், அவருக்கு வழங்கப்பட்ட குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் மனைவி மற்றும் நடனப் பெண்களுடன் இணைந்து பழங்குடியினரின் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்று பயணமாக சிக்கிம் சென்றுள்ளார். இந்நிலையில் சிக்கிம் அரசால், அவருக்கு வழங்கப்பட்ட குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேங்டாக்கில் கல்வி, சுகாதாரம், … Read more