கே.ஜி.எப் 2 பாடலை பயன்படுத்திவிட்டார்… ராகுல் காந்தி மீது காப்புரிமை வழக்குப்பதிவு…!

பெங்களூரு, தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ’ என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற … Read more

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு

சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலிய ரசிகர்கள் இலங்கை அணி ஜெயிக்க … Read more

மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு; இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்

லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருவதுடன், அடுத்தடுத்து பெரும் பேரணிகளையும் நடத்தி வருகிறார். இதேபோன்றதொரு நீண்ட பேரணி சமீபத்தில் நடந்தது. இதன்படி, பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனை தொடர்ந்து, லாகூரில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். … Read more

ரேஷன் அரிசி சாப்பாடு.. ஆழ்ந்த அமைதி.. 5 வேளை தொழுகை.. ஜமேஷா முபின் குறித்து மாமனார் பேட்டி

ரேஷன் அரிசி சாப்பாடு.. ஆழ்ந்த அமைதி.. 5 வேளை தொழுகை.. ஜமேஷா முபின் குறித்து மாமனார் பேட்டி Source link

உலக அழகிப் போட்டியில் மோசடியா? பிரியங்கா சோப்ரா மீது குற்றம்சாட்டிய லீலானி மெக்கோனி!

பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலாகப் பணியாற்றியவர். 2000-ம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் பிரியங்கா வெற்றி பெற்றதுதான் பாலிவுட்டில் அவர் கால்பதிப்பதற்கான ஒரு படிக்கல்லாக இருந்தது. ஆனால் தற்போது பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது மோசடியானது என்ற குற்றச்சாட்டை 2000-ம் ஆண்டில் அவருடன் உலக அழகிப்போட்டியில் பங்கேற்ற முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி முன்வைத்துள்ளார். … Read more

சாயல்குடி அருகே பெண்ணிடம் சங்கிலியை பறித்து தப்பியோடிய 2 பேர்.. காரில் 10 கி.மீ. விரட்டிச் சென்ற பிடித்த கிராம மக்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு பைக்கில் தப்பிய நபரை சுமார் 10 கிலோ மீட்டர் காரில் தூரம் விரட்டி சென்று பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். வெட்டுக்காட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி, மளிகை கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பைக்கில் வந்த 2 பேர்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த, இளைஞர்கள் சிலர் கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் பத்து கிலோ … Read more

சென்னை – எழும்பூர் தமிழ்ச்சாலையில் இரவோடு இரவாக ரெடிமேட் குழாய்கள்: மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை

சென்னை: எழும்பூர் தமிழ்ச்சாலையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி இரவோடு இரவாக ரெடிமேட் குழாய்களை அமைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதில், எழும்பூர் தமிழ்ச்சாலையில் அதிக அளவு மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த தண்ணீர் 2 மோட்டார்கள் கொண்டு வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், நேற்று ஒரேநாள் இரவில் 20-க்கும் … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பாஜக பிரமுகர் வைத்த பேனர்!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லருடன் ஒப்பிட்டு டெல்லி பாஜக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பக்கா. இவர், டெல்லியின் காற்று மாசு விவகாரம் குறித்து டெல்லி பாஜக அலுவலகம் முன்பு, அம்மாநில முதல்வர் கேஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒன்றை வைத்துள்ளார். அந்த போஸ்ட்டரில், ‘தான் வாழும் நகரினை விஷவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் … Read more

கலவரம் நடத்த முயல்கிறதா ஆர்.எஸ்.எஸ்? அமைச்சர் குற்றச்சாட்டு!

பேரணி மூலம் கலவரத்தை நடத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை திருவிக நகர் மண்டலத்தில் பருவகால மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டதால் 98 சதவீத பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் பெருமழை பொழிந்தபோதும் சென்னைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று பல்வேறு ஊடகங்கள் … Read more

ஷியாம் சரண் நேகியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை அவர் பெற்றார். அன்று … Read more