பள்ளியில் துப்பாக்கி 2 மாணவர்கள் கைது

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் புர்குண்டா பகுதியில் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். 9ம் வகுப்பறையில் மாணவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து கொண்டனர். இதை வகுப்பாசிரியர் கவனித்தார். உடனே அவர்களிடம் சோதனை நடத்தியபோது, 9ம் வகுப்பில் படிக்கும் மாணவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி கண்டறியப்பட்டது. அதிர்ச்சியடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் சார்பில், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் பள்ளிக்கு விரைந்தனர். அந்த மாணவனிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்தனர். அதே பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவருக்கு கொடுப்பதற்காக துப்பாக்கியை எடுத்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தீவி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.