டெல்லி: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை வழியே கன்னியாகுமரியை நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.