”லட்சுமியே இறுதியாக இருக்கட்டும், மீண்டும் ஒரு யானை வேண்டாம்!” – கோரிக்கை வைக்கும் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களின் வருகைக்கு முன்பே,  அதாவது 1666-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுத்தலமாக இருந்து வரும் மணக்குள விநாயகர் கோயில், சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் யானை லட்சுமி. 1997-ம் ஆண்டு தன் ஆறு வயதில் இந்தக் கோயிலுக்கு வந்த லட்சுமிக்கு, அக்டோபர் 2013-ல் புதுவை நகராட்சியால் உரிமம் கொடுக்கப்பட்டது. செப்பு பதக்கத்தால் செய்யப்பட்ட அந்த உரிமம் லட்சுமியின் கழுத்தில் ஆபரணமாக தொங்கிக் கொண்டிருந்தது. யானை லட்சுமி கடும் … Read more

“பீட்டாவுக்கு தார்மிக உரிமை இல்லை” – ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற கேள்விகளும், தமிழக அரசின் வாதங்களும்

புதுடெல்லி: 5,000 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சார நிகழ்வை பொய்யையும், அவதூறையும் கூறி நிறுத்தப் பார்க்கக் கூடாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான மனுக்கள் மீதான 4-வது நாள் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “காட்டு விலங்குகள் மற்றும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டது என விலங்குகள் இரண்டு வகைப்படும். விலங்குகளுக்கென தனி உரிமை உண்டு. அதை … Read more

விழிஞ்சம் துறைமுகத் திட்டம் நிறைவேறும்: கேரள மீன் வளத்துறை அமைச்சர் கருத்து

விழிஞ்சம்: கேரளா தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கிறது விழிஞ்சம். கடற்கரைப் பகுதியான இங்கு ரூ.7,500 கோடி முதலீட்டில் அரசு – தனியார் கூட்டமைப்பில் துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பெரும் பங்கு முதலீட்டை அதானி குழுமம் மேற்கொள்கிறது. இந்தத் துறைமுகத்தால் கடல் அரிப்பு ஏற்படும் என்றும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் இப்பகுதி மீனவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் பேசுகையில், … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம் ஏன்? -ஐடி துறை நீதிமன்றத்தில் விளக்கம்!

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், நான்கு வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் … Read more

தூக்கத்தை கெடுத்த சேவல் மீது பரபரப்பு புகார்.. நடவடிக்கை எடுத்த போலீஸ்..!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புற்றுநோயியல் மருத்துவர் ஒருவர், பக்கத்துக்கு வீட்டு சேவல் தனது தூக்கத்தை கெடுப்பதாக கூறி சேவல் மீது புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் புற்றுநோயியல் மருத்துவர் அலோக் மோடி. இவர் இரவில் பணியாற்றிவிட்டு விடியற்காலையில் வீட்டில் வந்து உறங்கி வந்துள்ளார். அப்போது, பக்கத்துக்கு வீட்டுக்காரர் வளர்த்து வரும் சேவல் அந்த நேரத்தில் தினமும் கூவுவதால் டாக்டர் தூங்க முடியாமல் அவதிபட்டு வந்துள்ளார். சேவல்கள் அதிகாலையியில் … Read more

கூவம் ஆற்றில் ஆண் சடலம் – சென்னையில் பரபரப்பு

சென்னை சைதாப்பேட்டை ஆட்டு தொட்டி கூவம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  இதையடுத்து தீ அணைப்பு வீரர்கள்  வரவழைக்க பட்டு இறந்த உடலை மீட்டனர். இறந்தவர் அணிந்த சட்டை பையில் இருந்த கைபேசியை காவல்துறை உயர் அதிகாரிகள் கைபற்றி உள்ளனர். விவரம் அறிந்து வந்த இறந்தவரின் சகோதரர் அடையாளம் காட்டினார்  இறந்தவர் பெயர் ராம்சிங் பிரசாத்  (வயது 52)  பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்துவந்துள்ளதாகவும்  விசாரணையில் … Read more

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி என்றும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய அரசு  தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும்  ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  அதன்படி கடந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவல் வெளியிடப் பட்டு உள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1,45,867 … Read more

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றில் மணலை மூட்டை கட்டி நூதன முறையில் கடத்தல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்று மணலை மூட்டை மூட்டையாக கட்டி பைக்குகளில் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பாலாற்றிலிருந்து இரவு, பகல் நேரங்களில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. அதிகாரிகளின் கடும் நடவடிக்கை காரணமாக மணல் கடத்தல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் வாகனங்களில் மணல் கடத்தினால் அதிகாரிகளிடம் சிக்கி விடுவோம் எனக்கருதி நூதன முறையில் மணல் கடத்தல் சமீப காலமாக நடக்கிறது. அதாவது … Read more

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் டிஸ்சார்ஜ்

சென்னை; வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ எடுத்துக் கொண்டிருந்த தென்கொரிய பெண்ணுக்கு முத்தம்: மும்பையில் 2 வாலிபர்கள் கைது

மும்பை: மும்பையில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் யூடியூபரை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சேர்ந்த பெண் யூடியூபர், மும்பையில் ஆன்லைனில் லைவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் யூடியூபரை இரண்டு வாலிபர்கள் கையைப் பிடித்து இழுத்து, அவரது உதட்டில்  முத்தம் கொடுக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ெவளியிட்டார். அதன் … Read more