‛‛வரும் ஓராண்டில் 200 ஜி20 கூட்டங்கள் நடைபெறும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்| Dinamalar

புதுடில்லி: வரும் ஓராண்டில் 200 ஜி 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகில் பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த 20 நாடுகளில் கூட்டமைப்பான ஜி 20ன் தலைமைப்பொறுப்பை இந்தியா இன்று(டிச.,01) முறைப்படி ஏற்றுள்ளது. இதனை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் , கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் … Read more

வாரிசு – ஜனவரி 12 வெளியீடு என அறிவித்த வெளிநாட்டு வினியோகஸ்தர்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரிசு'. இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமலே உள்ளது. இதனிடையே, இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள பார்ஸ் பிலிம் கம்பெனி தாங்கள் இப்படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறோம் என்ற அறிவிப்புடன் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று தேதியையும் குறிப்பிட்டுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே … Read more

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 10 ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் – காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி

மும்பை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் மத்திய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார். தினத்தந்தி Related … Read more

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை நியமித்தது பிசிசிஐ

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ ) தனது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (சிஏசி) நியமித்துள்ளது . அதில் முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழு புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்யும். கடந்த மாதம் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் பிசிசிஐ நீக்கியது. தினத்தந்தி Related Tags : பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் … Read more

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாண தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினத்தந்தி Related Tags : … Read more

அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம் – திராவிட அரசியலின் மூத்த தலைவர் கி. வீரமணி

அறிவியல் சிந்தனையை இந்து எதிர்ப்பாக குழப்ப வேண்டாம் – திராவிட அரசியலின் மூத்த தலைவர் கி. வீரமணி Source link

சாலையை கடக்க முயன்ற காவலர்.! அதிவேகமாக மோதிய இருசக்கர வாகனம்.! 3 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகன மோதியதில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே காவலர் கார்த்திகேயன் என்பவர் சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று கார்த்திகேயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதையடுத்து … Read more

சிலிண்டர் விலை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக மாற்றமில்லை..!!

பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டபோது, காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால், நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை சராசரியாக ரூ1,100 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தினர்.இதன்பின், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என அடுத்தடுத்த மாதங்களில் … Read more

ஏரியில் கட்டிய பண்ணை வீடு; பாடகரின் வீட்டுக்கு சீல் – அதிகாரிகள் அதிரடி!

சட்டத்திற்குப் புறம்பாக ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்ற `நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகம்’ (The department of town and country planning) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி அப்பகுதியில் மூன்று பண்ணை வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றுக்கு சீல் வைக்க மற்றும் இடிக்கத் திட்டமிட்டனர். இந்த மூன்று பண்ணை வீடுகளின் பட்டியலில், பஞ்சாபி பாடகரான தாலேர் மெகந்தியின் (Daler Mehndi) வீடும் ஒன்று உள்ளது என்பதை மூத்த … Read more

விவசாயிகளிடம் பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் மளிகை பொருட்களை தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக் கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு 2017 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக இலங்கை தமிழர்கள் உட்பட 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரரகளுக்கு வேஷ்டி, … Read more