சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி காவல் துறை மேல்முறையீடு

புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் உயிரிழந்த வழக்கில் இருந்து அவரது கணவரான சசி தரூர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி காவல் துறையினர் மேல்முறையீடு செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா புஷ்கர். இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது … Read more

மியான்மரில் ஜனநாயகத்திற்கான போராட்டம்: இதுவரை 2,000 பேர் படுகொலை – 'அதிபர்' துவா லஷி லா தகவல்

பேங்காக்: ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயகத்திற்காக போராடிய 2,000 போராட்டக்காரர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ‘அதிபர்’ துவா லஷி லா தெரிவித்துள்ளார். மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவ ஆட்சிக்குழு. இந்நிலையில், ஆங் சான் சூச்சி ஆதரவு தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் பிற தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமை அரசு (NUG) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல் தலைவராக … Read more

மூன்று கோவில் யானைகள்: வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதி!

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் யானை உட்பட மூன்று கோவில் யானைகளுக்கு வனத்துறை வழங்கும் உரிமைச் சான்றிதழ் காலாவதியாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று கோவில் யானைகளின் நிலை குறித்தும் அதன் சான்றிதழ் குறித்தும் பல்வேறு கேள்விகள் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் … Read more

தி காஷ்மீர் பைல்ஸ் விவகாரம்..இஸ்ரேல் இயக்குநர் மன்னிப்பு..ஆனால் அதே சமயம்..?

கோவாவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய 53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட், ‘“தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து … Read more

கார்த்திக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன்தாரா! சீக்ரெட்டை வெளியிட்ட லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படம் மெகாஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இவருக்கும் சூப்பராக கெமிஸ்டிரி வொர்க்அவுட் ஆனதால் சிறுத்தை மற்றும் தோழா ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து ஜோடியாக நடிக்கத் தொடங்கினர். ஆனால், பையா பட வாய்ப்பு முதலில் தமன்னாவுக்கு செல்லவில்லை. நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என இயக்குநர் லிங்குசாமி முடிவெடுத்து, அவரை அணுகியுள்ளார். ஆனால், ஏதோ காரணத்தால் அப்போது அந்த பட வாய்ப்பை தட்டிகழித்துவிட்டார் நயன்தாரா. … Read more

வனத்துறைக்கு போக்கு காட்டும் பெண்ணை கொன்ற காட்டு யானை; பீதியில் மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் PM2 மக்னா யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 19 ஆம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவாலா வாழவையல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய அந்த யானை பாப்பாத்தி என்ற பெண்மணியை தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாக யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்குப் பிறகு யானை பிடிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி யானையை … Read more

ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை கண்டுபிடித்த பொலிசார்: தொடர்ந்த பயங்கரம்…

ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை பொலிசார் கண்டுபிடித்ததால், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளார் அவர். சட்ட விரோதமாக மான் வேட்டைக்குச் சென்ற ஜேர்மானியர்கள் ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Kusel என்ற நகரில் பொலிசார் இருவர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்போது, Andreas S (39) மற்றும், Florian V(33), என்னும் இருவர் பயணித்த வாகனத்தை அவர்கள் நிறுத்தி சோதனையிட முயன்றபோது, திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் Andreas. விடயம் என்னவென்றால், Andreasம் அவரது கூட்டாளியும் சட்ட … Read more

மழை விடுமுறையை ஈடு கட்ட வரும் சனிக்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலைநாள்!

சென்னை:  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செய்லபடும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று … Read more

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கணவருடன் ஆஜர்

திருச்சி: திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா(30). இவர்  சில மாதங்களுக்கு முன் நாடக நடிகரான முனிஷ்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் ராஜ்கிரண், அவரது மனைவி பத்மஜோதி(எ) கதீஜாவுக்கு விரும்பமில்லாததால் மகளுடன் தொடர்பில்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜீனத்பிரியா கணவருடன் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மாலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் (கதீஜானின் முதல் கணவர்) தஞ்சம் அடைந்தார். தற்போது அவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இளங்கோ ஓய்வு … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதமடித்து புதிய சாதனை

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள்  சதமடித்து  சாதனை படைத்துள்ளனர். ஒரே நாளில் அதிக ரன்களை (506-4) குவித்து  இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. சாக் கிராலி (122), பென் டக்கெட் (107), ஒல்லி போப் (108), ஹாரி புரூக் (101) ஆகியோர் சதமிடித்தனர்.