ரஷ்யாவில் 'புஷ்பா' படக்குழு

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் சுமார் ரூ.300 கோடி வரை வசூலித்தது. அப்படத்தைத் தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அடுத்த வாரம் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். இன்றும், நாளையும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் படத்திற்கான பிரிமீயர் காட்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக புஷ்பா படக்குழுவினர் … Read more

கோவை | ரேஷன் கடை பெண் ஊழியரை கிண்டல் செய்த வாலிபர் கைது.!

கோவை மாவட்டத்தில் பாட்டு பாடி ரேஷன் கடை பெண் ஊழியரை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். அப்பொழுது காந்திநகர் பகுதியை சேர்ந்த முருகசாமி (34) என்பவர் எடை போடும் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் முருகசாமி மது அருந்திவிட்டு வந்து வேலைக்கு வந்ததால் இளம்பெண் அவரை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். … Read more

நடுரோட்டில் பிரபல பெண் யூடியூபர் மானபங்கம்.. இரண்டு இளைஞர்கள் கைது..!

மும்பையில், சாலையில் நேரலை செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபரை மானபங்கம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மையோசி இன். இவர், நேற்று (நவ.30-ம் தேதி) இரவு மும்பை புறநகர் பகுதியான கர் என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த இளைஞர் ஒருவர், அவருடைய கையை பிடித்து இழுத்துச் சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து “நோ.. நோ..” எனக்கூறிய மையோசியை … Read more

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்: சோகத்தில் தமிழ்த் திரையுலகம்..!

தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பு காரணமாக இன்று மதியம் கும்பகோணத்தில் காலமானார். அவருக்கு வயது (65). பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமானவர் கே.முரளிதரன். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர்கள் வாமிநாதன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘அரண்மனை காவலன்’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘தர்மச் சக்கரம்’, ‘பிரியமுடன்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘உன்னைத் தேடி’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘கண்ணன் வருவான்’, … Read more

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 25 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கலியனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது துரைராமனுக்கு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டல்லவா…! கோபம், பாபம், சண்டாளமாயிற்றே…! கோபத்தில் காரியம் செய்பவனும், கடும் புயலில் கப்பல் விடுபவனும் மீளமுடியாதே…! நிதானத்தை இழக்கச் செய்துத் தவறிழைக்கத் தூண்டி, இறுதியில் தலை குனிய வைத்துவிடுமே ஆத்திரம்…! … Read more

மழை விடுமுறையை ஈடுகட்ட சென்னையில் சனிக்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலைநாள்

சென்னை: பெருமழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செய்லபடும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள தகவல்: தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு … Read more

“நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை” – ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து இஸ்ரேலிய இயக்குநர் விளக்கம்

புதுடெல்லி: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சனம் செய்த தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஓர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவமதிக்கவும் நினைக்கவில்லை. என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது. நான் அங்கு பேசியது என் கருத்து மட்டுமல்ல. உடன் இருந்த நடுவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிப்பதாகவே நான் … Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிக்கல்; தமிழ்நாடு அரசு பரபரப்பு உத்தரவு!

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் பெரும்பாலும் வெளியில் சென்று விடுவதாகவும் அவர்களுக்கு பதிலாக வெளியாட்கள் வேலை செய்து வருவதாகவும் தமிழ்நாடு அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் தொடர்ந்து அதிகளவிலான புகார்கள் சென்றன. இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டாஸ்மாக் கடை பணியாளர்கள் சமீப காலமாக தலைமை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்திக்க அடிக்கடி தலைமை அலுவலகம் வருவது, ஒரு மாவட்டத்தில் … Read more

'இது ராம பக்தர்களின் நிலம்' – மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்து உள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில், இரண்டு கட்டங்களாக, தேர்தல் நடக்கிறது. அதன்படி, 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டு கட்ட வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட … Read more