வந்துட்டாருய்யா வந்துட்டாரு – பட்டையை கிளப்பும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர்

வடிவேலு தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்து முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்: வருமானவரித்துறை விளக்கம்

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் … Read more

மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய மற்றும் சீன அணு ஆயுத விமானங்களால் பரபரப்பு

அணு ஆயுதங்களை வீசும் திறன் கொண்ட ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்த விடயம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீறிப்பாய்ந்த தென் கொரிய போர் விமானங்கள் ஆறு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தென் கொரிய எல்லைக்குள் நுழைந்ததையடுத்து, தென் கொரிய இராணுவம் தனது போர் விமானங்களை அனுப்பவேண்டிய பதற்றமான சூழல் உருவாகியது. நேற்று, சீன போர் விமானங்கள் கொரிய வான் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் … Read more

ஜல்லிக்கட்டு பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது – போட்டியை காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது, இந்த போட்யை  காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரியில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்க பிரபலமான அலங்கா நல்லூர், அவனிபுரம், பாலமேடு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஜல்லிக்கட்டு போட்டியாளர்கள் அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க … Read more

திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.  இந்த ஆய்வின் போது விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், ரோசனை காவல் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய மருந்தியல் கல்வி அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 8-வது நிதி ஆணைய பரிந்துறைப்படி மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 ஜனவரி 20-ல் 8-வது நிதி ஆணையம் மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறூவனம் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்

காந்திநகர்: குஜராத் மாநிலம் ஜாம்பூரில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கென முதன் முறையாக அவர்களது கிராமத்திலேயே பிரத்யேக பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள ஜாம்பூரில் ஆப்பிரிக்க பூர்வகுடிகளான சித்தி பழங்குடியின மக்கள் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். தெள்ளத்தெளிவாக குஜராத்தி மொழி பேசும் அம்மக்கள் இந்திய குடிமக்களாக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வாக்களிக்கின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் … Read more

”20 ஆண்டாக கழுத்தளவு தண்ணீரில்தான் எடுத்து செல்கிறோம்” – மயானத்திற்கான பாதையில்லாத அவலம்

மயானத்திற்கு உரிய பாதையில்லாததால் இடுப்பளவு தண்ணீருக்குள் சடலத்தை தூக்கி செல்வதும், மழை காலங்களில் கழுத்தளவு நீரில் சுமந்துசெல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சத்திரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டமான்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.இந்நிலையில் இங்கு வசிக்கும் மக்களுக்கான பொது மயானத்திற்கு செல்ல வழி இல்லாத நிலையில், ஆளுயர அளவிற்கு தண்ணீரில் நனைந்தபடி சடலங்களை தூக்கி செல்லும் அவலம் கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவருகின்றது. இந்த கிராமத்தின் அருகேயுள்ள கிழுவை மலை பகுதியில் இருந்து வரும் … Read more

‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ படங்களின் தயாரிப்பாளர் கே.முரளிதரன் காலமானார்!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.முரளிதரன் இன்று காலமானார். தமிழ் திரையிலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக லட்சுமி மூவி மேக்கர்ஸ் விளங்கி வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளாக கே. முரளிதரன், வி. சுவாமிநாதன், ஜி. வேணுகோபால் ஆகியோர் இருக்கின்றனர். கடந்த 1994-ம் ஆண்டு ‘அரண்மனை காவலன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே. முரளிதரன், தொடர்ந்து ‘கோகுலத்தில் சீதை’, ‘பிரியமுடன்’, ‘உன்னிடத்தில் … Read more

6 வயது சிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு 62 ஆண்டு

பாலக்காடு,பாலக்காட்டில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 62 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பட்டாம்பியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம், 30. ‘மதரசா’ எனப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத்தரும் பள்ளியில் பணிபுரியும் இவர், 2019ல் 6 வயது சிறுமியை மதரசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் இவ்வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.வழக்கு பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் நடந்து … Read more