லோகேஷ் கனகராஜா, விக்ரமா… மாதவன் எடுத்திருக்கும் முடிவு… உண்மை என்ன?

அலைபாயுதே படம் மூலம் அறிமுகமான மாதவன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கிய அவர் இறுதிச்சுற்று படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தினார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்தார். அப்படி அவர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ராகெட்ரி என்ற படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே … Read more

குஜராத்தில் மந்தமான வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குப்பதிவு

காந்திநகர்: குஜராத்தில் காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து  மந்தமான நிலையிலேயே  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில், இன்று (1-ந்தேதி) முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக … Read more

FIFA உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததைக் கொண்டாடிய ஈரானிய வீரரின் நண்பர் சுட்டுக்கொலை

உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததைக் கொண்டாடியதற்காக ஈரானிய வீரரின் நண்பர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபடப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானியர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை கத்தாரில் நடந்துவரும் FIFA உலகக் கோப்பையில் இருந்து தனது நாட்டின் தேசிய அணியை அமெரிக்கா வெளியேற்றியதைக் கொண்டாடிய ஈரானியர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உரிமைக் குழுக்கள் தெரிவித்தன. தலைநகர் தெஹ்ரானின் வடமேற்கே காஸ்பியன் கடல் கடற்கரையில் உள்ள Bandar Anzali என்ற நகரத்தில் தனது காரின் ஹார்னை அடித்ததால், … Read more

சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டிசம்பர் 5 முதல் 8 -ம் தேதி வரை சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குஜராத் முதல்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவு

காந்திநகர்: குஜராத் முதல்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. முதல்கட்ட தேதில் தேர்தல் நடைபெறும் 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 63.88% வாக்குகளும், டபி மாவட்டத்தில் 64% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மோடி பிரதமரான 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு: பாஜகவை விமர்சித்த தெலுங்கானா முதல்வர் மகள்

ஹைதராபாத்: மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளும் எம்.பி.யுமான கவிதா விமர்சித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயரை சேர்த்து அமலாக்கத்துறை நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தெலுங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா; பாஜகவை கடுமையாக விமர்சித்தார். பிரதமராக பதவி வகித்த 8 ஆண்டுகளில் மட்டும் 9 மாநிலங்களில் ஜனநாயக முறைப்படி … Read more

மாசடைந்த ஆறு… குடிநீரை விலைக்கு மட்டுமே வாங்க வேண்டிய அவல நிலையில் ஒரு கிராமம்!

பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் குமரி மாவட்டத்திலுள்ள பூவாடி என்ற கிராமத்தின் மக்கள். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் உள்ளது பூவாடி கிராமம். நெல் விவசாய நிலம் அதிகமாக உள்ள இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் 30 விவசாய குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இந்த பகுதியின் ஒரு பகுதி வழியாக வள்ளி ஆறும், இன்னொரு புறம் பெரிய … Read more

”இப்படி தினமும் கூவினா எப்படி தூங்குறது?”-சேவலால் எரிச்சலாகி போலீசை நாடிய இந்தூர் டாக்டர்!

அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்னை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால் நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் காவல் துறையை நாடியிருப்பது மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. இந்தூரைச் சேர்ந்த அலோக் மோடி என்ற மருத்துவர்தான் புகாரளித்தவர் என தெரிய வந்திருக்கிறது. அதன்படி இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. அவரது புகாரில், ”எனது அண்டை வீட்டில் … Read more

பஸ் – லாரி மோதல் உ.பி.,யில் 6 பேர் பலி

பஹ்ரைச், உத்தர பிரதேச நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் மீது லாரி மோதியதில், ஆறு பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ – பஹ்ரைச் நெடுஞ்சாலையில், பஸ் மீது எதிரே வந்த லாரி நேற்று மோதியது. இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆபத்தான நிலையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

நியூசிலாந்து படப்பிடிப்பை முடித்த ஷங்கர் – ராம்சரண்

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண். இன்னும் பெயரிடப்படாத ராம்சரணின் இந்த 15வது படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியன்-2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கிய ஷங்கர், இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மாறி மாறி இயக்கி வந்தார். அந்தவகையில் நியூசிலாந்தில் ராம்சரண், கியாரா அத்வானி இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தார் ஷங்கர். இந்தநிலையில் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த … Read more