Acrobatic Dance: வாடிகனிலும் குதூகல டான்ஸ்! ரசித்து பார்க்கும் போப் வீடியோ வைரல்

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. கைக்குள் மொபைலில் அடங்கிவிட்ட இணையம், நம்முடன் இணைந்தே பயணிக்கிறது. ஒருகாலத்தில் தனி உலகமாக கருதப்பட்ட இணையமும் தொழில்நுட்பமும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டன. பாரம்பரியமான நிகழ்ச்சியில் அல்லது மதச்சடங்கு தொடர்பான வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அப்படி ஒரு வீடியோ, கிறிஸ்துவர்களின் புனித நகரான வாடிகனில் போப்பாண்டவர் முன்னிலையில் நடைபெற்ற அக்ரோபாட்டிக் நடன நிகழ்ச்சி வைரலாகிறது. கென்யாவைச் சேர்ந்த “தி பிளாக் ப்ளூஸ் பிரதர்ஸ்” என்ற ஒரு … Read more

விவசாய நிலமாக பதிவு செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம்: திருவெறும்பூர் சார்-பதிவாளர் கைது

விவசாய நிலமாக பதிவு செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம்: திருவெறும்பூர் சார்-பதிவாளர் கைது Source link

#BREAKING | பயிர் காப்பீடு : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டு குளிர்கால (ராபி) பருவப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என்று, விவசாயிகளை வேளாண்மை – உழவர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியான அரசு அறிவிப்பில், “மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், விவசாயிகள் சார்பாக காப்பீட்டுக் கட்டணத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2,339 கோடி … Read more

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் வழங்க வழிகாட்டல் வெளியீடு..!

மாவட்ட கல்வி அலுவலகம் புதிதாக பிரிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான சம்பளம் வழங்க வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அதில், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மாவட்ட கல்வி அலுவலகம் பிரிக்கப்பட்டது. இந்த அலுவலக பிரிப்பின் காரணமாக, பள்ளிகளின் எல்லைகளும் பிரிக்கப்பட்டன. அதேபோல், தொடக்கக் கல்விக்கு புதிதாக டிஇஓ, பிஇஓ அலுவலகங்களும் தொடங்கப்பட்டன. இந்நிலையில், இந்த … Read more

`ரூ.786 கோடி நஷ்டம்…' – அம்மா உணவகங்களை மூட திட்டமா?!

சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கனவுத் திட்டமான ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதலில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக சென்னையில் வார்டு ஒன்றுக்கு தலா 2 உணவகம், அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில்  திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 3,500 பேர் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 700 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அம்மா … Read more

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் | குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்க: வேளாண் துறை

சென்னை: நடப்பு 2022 – 2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில், இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள தகவல்: மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் … Read more

லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சீண்டிய இருவர் கைது: மும்பை போலீஸுக்கு தென்கொரிய பெண் யூடியூபர் நன்றி

மும்பை: தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் யூடியூபரை சீண்டிய இருவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பை கார் பகுதியில் நேற்றிரவு தென்கொரியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைச் சுற்றிச் சுற்றி வரும் இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை சீண்டுகிறார். தன்னுடன் வண்டியில் ஏறி வருமாறு அழைக்கிறார். அந்தப் பெண் இல்லை, இல்லை என்று மறுக்கிறார். இருந்தாலும் அந்தப் பெண்ணை … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டம்!

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தலைமையில் முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டு, ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், ஆளுநரை திரும்பப்பெற … Read more

Twitter பயனாளிகளுக்கு Followers குறையும்! எலன் மஸ்க் விளக்கம்!

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியவுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நடவடிக்கை என்றால் போலி கணக்குகளை முடக்குவது. இது நிச்சயம் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலர் அவர்களை பின்தொடர்வது உணமையான நபர்களோ அல்லது போலியான போட் கணக்குகளா என்பது கூட தெரியாமல் உள்ளனர். அதிரடியாக ட்விட்டரில் போலியான கணக்குகளை முடக்க எலன் மஸ்க் இறங்கியுள்ளார். இதனை ஒரு ட்வீட் மூலம் தெரிவித்த அவர் “ட்விட்டரில் இயங்கிவரும் போலியான … Read more

சூறாவளிக்காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கில் தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என வானிலை … Read more