வாட்ஸ்அப்பில் தவறான இந்திய வரைபடம்

புதுடெல்லி: தவறாக காட்டப்பட்டுள்ள இந்திய வரைபடத்தை உடனே சரி செய்யும்படி வாட்ஸ்அப் நிறுவனத்தை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், “இந்தியாவில் வணிகம் செய்து வரும், தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சரியான புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும்.

வாட்ஸ்அப் நிர்வாகிகளே தவறாக இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தை விரைந்து சரி செய்யுங்கள்” என ரீட்விட் செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதி பாதி மறைக்கப்பட்டு தவறான வரைபடம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.