மேற்கு ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட 3,300 பேர்!


மேற்கு ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 3,300 மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

500 கிலோ எடை வெடிகுண்டு

இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியில் வீசப்பட்ட ஏராளமான குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் புதைந்துள்ளன.

அவற்றில் பல குண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மேற்கு ஜேர்மனியில் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

எசென் நகரில் புனரமைப்பு பணிகளுக்காக குழி தோண்டியபோது இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட 3,300 பேர்! | Ww2 Bomb Found Western Germany 3300 Evacuated

3,300 பேர் வெளியேற்றம்

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், 480 பேர் Oberhausen நகரில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவ்வாறாக மொத்தம் 3,300 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான எல்லையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக WDR ஒளிபரப்பு அறிக்கை கூறியது.

இதற்கிடையில் ஜேர்மனி ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் மண்ணுக்கு அடியில் இருந்து பத்திரமாக எடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.