உன்னை நேசிக்கிறேன்! விமான விபத்தில் இறப்பதற்கு முன் பயணியின் கடைசி மெசேஜ்… கண்ணீர் சம்பவம்


இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பிய இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானம்

அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பீச்கிராஃப்ட் A 36 என்ற சிறிய ரக விமானம் தான் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.
இதில் Binyamin Chafetz மற்றும் Boruch Taub ஆகிய இருவரும் பயணம் செய்துள்ளனர்.

விமானத்தை Boruch இயக்கிய நிலையில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறங்க முயன்றபோது வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த Binyamin கடைசியாக தனது மனைவிக்கு அனுப்பிய மெசேஜ் குறித்து தெரியவந்துள்ளது.

Boruch Taub

Facebook/ boruch.taub

இறக்கும் முன் கடைசி மெசேஜ்

அந்த மெசேஜில், நான் உன்னையும் குழந்தைகளையும் நேசிக்கிறேன். நான் செய்த அனைத்திற்கும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எஞ்சின்கள் செயலிழந்து விட்டது என மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி AA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

செகண்ட் ஹேண்ட்  A36 விமானத்தின் சராசரி விலை சுமார் $240,000 (£200,000) ஆகும்.

இது 1970 மற்றும் 2005 க்கு இடையில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

Benjamin Chafetz

121ecommerce.com/ Twitter/ jhenrynews



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.