தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு இருளர் பழங்குடியினருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!


தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இருளர் பழங்குடியினருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடிய விஷப்பாம்புகளைப் பிடிக்கும் வல்லமை கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு இருளர் பழங்குடியினருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! | Padmashri Award For 2 Irular Tribes Tamilnadu

வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வளிக்கும் ORS solution கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவிக்கிறது.

உலகின் பல நாடுகளுக்கு சென்று விஷப் பாம்புகளை பிடித்துவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பாம்புகளை பிடித்துள்ளனர். விஷத்தன்மையுள்ள ராஜநாக பாம்புகளை அதிகளவில் பிடித்துள்ளனர். பல விஷப்பாம்புகள் பாம்புகள் தங்கள் பலமுறை சீண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.