5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை – திரிகோணமலையில் இருந்து சுமார் 340 கிலோ மீட்டர் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், பிப்ரவரி 2ம் தேதி 4 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

மேலும் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.