50 ஓவர் உலக கோப்பைக்கு 20 வீரர்கள் தேர்வு…! முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரை தவிர்க்கும்படி அறிவுறுத்த பிசிசிஐ திட்டம்

மும்பை, இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் … Read more

துப்பாக்கியால் சுட்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்ற பாகிஸ்தானியர்கள் – 22 பேர் காயம்

லாகூர், உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் கலைகட்டியுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் ஆங்கில புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். லாகூர், இஸ்லமாபாத், ராவுல்பெண்டி, கராச்சி உள்ளிட்ட நகரங்களில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். அவ்வாறு வானத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் … Read more

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின்….

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் இன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படும் பட்சத்தில் 6 சதவீதம் தொடக்கம் 36 சதவீதம் வரையில் 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடப்படவுள்ளது.

மாலத்தீவில் புத்தாண்டு கொண்டாடிய ரோகித் சர்மா….

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புத்தாண்டை குடும்பத்துடன் மாலத்தீவில் கொண்டாடினார். உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் களை கட்டியுள்ளன. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புத்தாண்டை குடும்பத்துடன் மாலத்தீவில் கொண்டாடினார். மனைவி, மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள ரோகித் … Read more

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்..!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலுடன் ஒன்றியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்தனர். வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வருகை தரும். இந்த ஆண்டு வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், ஊசிவால் வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் … Read more

புத்தாண்டு: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: புத்தாண்டை ஒட்டி, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். Source link

அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்த இந்தியா, பாகிஸ்தான்..!

அணுசக்தி நிலையங்கள், சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கவும், சிறை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், கடந்த 1988ம் ஆண்டு இருநாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. 1991ம் ஆண்டில் அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி இருநாடுகளும் பரஸ்பரம் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலைய விவரத்தை பகிர்ந்து வருகின்றன.  அதன்படி 32வது முறையாக இருநாடுகளும் … Read more

ஆடையில்லாமல் கிடந்த இளம்பெண்ணின் உடல்..விபத்தை ஏற்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற கார்

இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதில், அவரது உடல் சில கிலோ மீற்றர் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம்பெண் வாகனத்தின் மீது மோதிய கார் டெல்லியின் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. காரில் சென்றவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். குறித்த இளம்பெண் 7-8 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக … Read more

கேரள மாநிலம் வயநாடு அருகே காலில் காயத்துடன் சுற்றி திரிந்த பெண் புலி சாவு

கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு அருகே காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் புலி உயிரிழந்தது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா பூதாடி பேரூராட்சி பகுதியில் உள்ளது வாகேரி கிராமம். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகளின், ஆடுகளை புலி ஒன்று தாக்கி வேட்டையாடி வந்தது. இதனால், மக்கள் அச்சமடைந்தனர். ஆடுகளை வேட்டையாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, வனத்துறை சார்பில் புலியை … Read more