வருமுன் காப்போம்! கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்… காரணங்கள், தீர்வுகள்!

தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த, ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் 95 சதவிகிதம் சரி செய்ய முடிந்த, ஒரே புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மட்டுமே. ஜனவரி மாதம், சர்வதேச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். இந்நேரத்தில், செர்வைகல் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான காரணம் முதல், தீர்வு வரை முழுமையாகத் தெரிந்து கொள்ள, காவேரி மருத்துவமனையின் (சீலநாயக்கன்பட்டி, சேலம்) மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவர் சத்யா சுதாகரிடம் பேசினோம். Cervical Cancer … Read more

கீத்து வீடுகள் நிறைந்த பகுதியில் தீ விபத்து.. 5 கீத்து வீடுகள் தீயில் எரிந்து சேதம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூரில், கீத்து வீடுகள் நிறைந்த பகுதியில் நேர்ந்த தீ விபத்தில் 5 குடிசைகள் முற்றிலுமாக எரிந்தன. புதுப்பேட்டையில், தென்னங்கீத்தால் வேயப்பட்டு தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் வசிப்பவர், கேஸ் அடுப்பை ’சிம்’மில் வைத்துவிட்டு வெளியே சென்றபோது தீ விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அனைப்பதற்குள் தீ வேகமாகப் பரவியதால், 5 குடிசைளும், அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் போடப்பட்டிருந்த பந்தலும் கொளுந்துவிட்டு எரிந்தது. நகை, பணம், துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் … Read more

ராமேஸ்வரம் அருகே ரூ.1.35 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: இந்திய கடலோர காவல்படை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ரூ.135 கோடி மதிப்புள்ள 300 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாம்பனின் மேற்கு பகுதியில் உள்ள அத்தங்கரை கடற்கரை பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல் படையினர் அங்கு வருவதைத் தெரிந்துகொண்ட … Read more

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் திவால் நிலையின் விளிம்பில் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும். அந்நிய செலாவணி கையிருப்புக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பாகிஸ்தான் உள்ளாகி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் 294 மில்லியன் டாலர் (ரூ.2,410 கோடி) அளவில் … Read more

நீர் தொட்டியில் மனித மலம்.. வாழவே தகுதியற்றவர்கள்..வேல்முருகன் காட்டம்.!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக, தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகளை சிலர் கலந்துள்ளனர். இதனை அருந்திய குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்கும் நீரில் தான் பிரச்சினை என்று மருத்துவர்கள் கூற, உடனே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் குடிநீரில் மலம் கலந்த விஷயம் தெரியவந்தது. மக்கள் அதிர்ந்து போய்விட்டனர். உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more

மகாராஷ்டிராவில், பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலையில் மிகப்பெரும் தீ விபத்து..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசிக்கின் முண்டேகான் பகுதியில் உள்ள ஜிண்டால் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், ஆலையின் பிற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. கொளுந்துவிட்டு தீ எரிந்து வரும் நிலையில், ஏராளமானோர் ஆலையின் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட பெரும் தாக்கத்தை, சுமார் 20 முதல் 25 கிராமங்கள் … Read more

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். … இந்நிலையில் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்களு…

திற்பரப்பில் குவியும் சுற்றுலா பயணிகள்: அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் தற்போது மழை இல்லாததால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் திற்பரப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிலும் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகவே திற்பரப்பு பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருந்தனர். அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த … Read more

சபரிமலையில் இன்று 1 லட்சம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம்: மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், நேற்று 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்தனர். இன்று புத்தாண்டு தினம் என்பதால் ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். பல நாட்களுக்கு முன்பே இன்றைய தரிசனத்திற்காக பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். நெரிசல் … Read more

”திருக்குறள் சொல்லியே மக்களை ஏமாற்றுகிறார் ஆளுநர் ரவி” – வைகோ விமர்சனம்!

ஆங்கிலா புத்தாண்டை முன்னிட்டு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  “மதிமுகவில் புதிய உறுப்பினர்சேர்ப்பு பணிகள் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து கட்சியின் கிளை, மாவட்ட தேர்தல்கள் என 3 மாதத்தில் நடக்க இருக்கிறது.  துரை வைகோ சார்பில் தயாரிக்கப்பட்ட மாமனிதன் வைகோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வந்து பல மதங்களை கொண்ட இந்திய நாட்டில் … Read more