விஜய்தான் சூப்பர் ஸ்டார் – கொளுத்திப்போட்ட பத்திரிகையாளர்; முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள்

துணிவா, வாரிசா என பிரச்னை புகைந்துக்கொண்டிருந்த சூழலில் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு, தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1 என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யார் நம்பர் 1 என்ற பிரச்னையை விஜய் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பேச்சும் ஒருவகையில் அஜித் தனக்கு போட்டியே இல்லை என்பதை உணர்த்தும் விதமாகத்தான் இருந்தது. … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. இந்த … Read more

சி.ஆர்.பி.எப். உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கி பறிப்பு.. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐயிடம் தீவிரவாதிகள் அட்டகாசம்..!

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளரிடமிருந்து துப்பாக்கியை தீவிரவாதி பறித்துச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெல்லோ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போதே துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ராணுவம், உள்ளூர் போலீஸார் மற்றும் மத்திய காவல் படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். Source link

`பிரம்மாஸ்திரா முதல் விக்ரம் வரை!' 2022-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்!

2022 ஆம் ஆண்டு  கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின்  பட்டியலை கூகுள்  நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் பல மொழிப் படங்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழில் ஒரு படம் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின்  பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கும் படம் பிரம்மாஸ்திரா. அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்திருந்தனர். இரண்டாவது இடத்தில் இருக்கும் படம் கேஜிஎஃப் 2 .  யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி … Read more

21 வருடங்களுக்கு முன்பு கழிவறையில் விழுந்த மோதிரம்: மனைவிக்கு பரிசளித்து ஆச்சரியப்படுத்திய கணவன்

21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நிச்சயதார்த்த மோதிரத்தை மீண்டும் மனைவிக்கு பரிசாக அழைத்து கணவர் அசத்தியுள்ளார். தொலைந்து போன மோதிரம் அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நிக் டே என்ற நபருக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது, திருமணத்திற்கு முன்னதாக தனது காதல் மனைவி ஷைனாவுக்கு ஆசையாக வைர மோதிரம் ஒன்றை நிக் டே பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து திருமணம் நடைபெற்று இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு காதலி ஷைனா தனது கையில் இருந்த மோதிரத்தை டாய்லெட்டில் தவறவிட்டு … Read more

சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் – டெல்லி கிரிகெட் அசோசியேஷன் தகவல்

உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை 5:30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது எதிரே ஹ்ரிதுவாரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் சென்று கொண்டிருந்த ஹரியானா அரசு … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் மதுவிருந்தில் வாலிபர் பலி

ஏற்காடு: ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாலிபர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் சந்தோஷ் (23). இவர் நேற்று மாலையில் புத்தாண்டை கொண்டாட நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சென்றார். அங்கு அவர், நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடும் வகையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் அவர்கள் அனைவரும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். … Read more

காஷ்மீரில் கடந்த ஓராண்டில் 186 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: தீவிரவாதத்தை ஆதரித்த 557 பேர் மீது வழக்கு

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான படையினரின் நடவடிக்கைகள் குறித்து காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறுகையில், ‘காஷ்மீரில் பூஜ்ஜிய தீவிரவாத நடவடிக்கைகள் என்ற திசையில் போலீசாரும், பிற பாதுகாப்பு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொலைகள், கையெறி குண்டு வீச்சுகள் போன்ற தீவிரவாத  செயல்களுக்காக பாகிஸ்தான் அமைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட 4 முதல் 5 வரையிலான எண்ணிக்கை கொண்ட தீவிரவாதிகள் அடங்கிய 146 தீவிரவாத  தொகுப்புகள் கடந்தாண்டு … Read more

உண்டியல் திருடர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார்.. ஆரணியில் என்னதான் நடக்கிறது?

ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கோவில்களில் கடந்த இரண்டு மாதத்தில் உண்டியலை உடைத்து திருடும் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு நேரங்களில் கோவில்களில் உள்ள உண்டியல்களை உடைத்து மர்ம கும்பல் ஒன்று பணத்தை திருடி வருகிறது. ஆரணி அருகே லட்சுமி நகர் முத்துமாரியம்மன் கோவில், வி.ஏ.க நகர் விநாயகர் கோவில், ஆரணி பாளையம் விநாயகர் கோவில், … Read more

மனைவியும், பால்ய நண்பரும் உறவில் இருந்ததால் ஆத்திரம்: சரமாரியாக குத்திக் கொன்ற கணவர்!

தனது பால்ய நண்பருடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததற்காக 30 வயதுடைய மனைவியையும் நண்பரையும் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவத்தில் ஆறே மணிநேரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. கொலைக்கான பின்னணியை விசாரிக்க களத்தில் இறங்கிய டெல்லி போலீசார் இந்த இரட்டைக்கொலை குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி கடந்த கடந்த டிசம்பர் 30ம் தேதி 30 வயது பெண் மற்றும் ஒரு ஆணின் உடல் ஆரோபிந்தோ மார்க்கத்தில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனை அருகே ரத்த … Read more