Budget 2023: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் நேரலை எங்கு? எப்படி பார்ப்பது?

Union Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023 -ஐ நாளை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டபேரவை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் தாக்கலாக இது பார்க்கப்படுகிறது. அதனால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நயிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் உரை தொடங்கும் நேரம் மற்றும் அதனை எங்கு? எப்படி? நேரலையில் பார்ப்பது என இங்கே தெரிந்து … Read more

பெருந்தொற்று காலத்தில் இழந்த பொருளாதாரம் கிட்டத்தட்ட மீட்டெடுக்கப்பட்டது – பொருளாதார ஆய்வறிக்கை

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட மீட்டெடுக்கப்பட்டதாகவும், மந்த நிலை மாறி மீண்டும் ஆற்றல் பெற்றுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதி ஆண்டில் மார்ச் மாத நிறைவுடன் பொருளாதார வளர்ச்சி ஏழு சதவீதமாக இருக்கும் என்றும், 2023-24ஆம் நிதியாண்டில் 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  அதிவேகமாக … Read more

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் துண்டிக்கப்பட்ட தலை கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு தளத்தில் தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலை கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலை பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் திங்கள்கிழமை நடந்த மசூதி குண்டுவெடிப்பு தளத்தில் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்பு அதிகாரிகள் இன்று மீட்டனர். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 93-ஆக உயர்ந்தது, 221 பேர் பலத்த காயம் அடைந்தனர், இடிபாடுகளில் இருந்து மீதமுள்ள உடல்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸ் … Read more

பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்… சிம்பு பிறந்தநாளான பிப். 3 ம் தேதி வெளியாகிறது…

சிலம்பரசன் நடிப்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் பத்து தல. கன்னட படமான மஃ ப்டியின் ரீமேக்கான இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்பு-வுடன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து தல படத்தில் இருந்து ‘நம்ம சத்தம்’ என்ற பாடல் பர்ஸ்ட் சிங்கிள் … Read more

சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குமரி மீனவர் படுகாயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். அவரது மகன் ராஜேஷ் குமார் (37). சின்னமுட்டம் கிராமத்தை சேர்ந்த தொன்மை செபாஸ்டின் மகன் பிரிட்டோ, சேகர் மகன் செபாஸ்டின், பெரியக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணலை சேர்ந்த கொர்நெளியஸ் மகன் துரைராஜ் ஆகிய 5 மீனவர்களும் சவுதி அரேபியா நாட்டில் கத்திப் என்ற பகுதியிலிருந்து சவுதி அரேபியா நாட்டில் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலாளிக்கு சொந்தமான “ரஸ்மா … Read more

2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: 2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011-க்குப் பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான் என உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது

வனப்பகுதியில் பதுங்கியிருந்த 4 லஷ்கர் தீவிரவாதிகள் கைது

அவந்திபோரா: ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள ஹஃபு நவிபோரா வனப்பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி) தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் … Read more

பழனி: `கருவறைக்குள் நுழைஞ்சிட்டாங்க; மீண்டும் கும்பாபிஷேகம் தேவை’- குருக்கள் சர்ச்சை ஆடியோ

பழனி கோவில் கருவறைக்குள் முக்கிய நபர்கள் முதல் பலரும் நுழைந்து ஆகம‌விதி மீறியது உண்மை என்றும், பழனி கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும் பழனி கோவில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தின் தலைவரும் பழனி கோவிலை சேர்ந்தவருமான கும்பேஷ்வரர் குருக்கள் என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதல்நாளான ஜனவரி 26ம் தேதி ஆகம விதிகளை மீறி சிலர் கோவில் … Read more

2023-24 இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? நிதியமைச்சர் சமர்ப்பித்த ஆய்வில் தகவல்

2023-24ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், அதன் மைய மண்டபத்தில் இன்று (ஜனவரி 31) தொடங்கியது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை ஆற்றினார். தொடர்புடைய செய்தி: ”நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலே முறைகேடுதான்” – குடியரசுத் தலைவர் முர்மு உரை – முழுவிபரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி ஜனாதிபதி பதவி ஏற்று கொண்ட … Read more

உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது: ஜனாதிபதி உரை| Indias Global Value Rises: Presidential Address

புதுடில்லி: கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவை, உலகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளது. அதில் மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். வரவேற்பு பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று(ஜன.,31) துவங்கியது. பார்லிமென்ட் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர். முக்கியம் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:*சில ஆண்டுகளுக்கு முன்பு, நாடு 75வது … Read more