கூடுதல் பலத்துடன் மீண்டும் களமிறங்கும் சமந்தா! இயக்குனர் யார் தெரியுமா?

வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை அமேசான் பிரைம் வழங்குகிறது. ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO குளோபல் ஈவண்ட்  தொடரான சிட்டாடல் யுனிவர்சின் இந்திய இன்ஸ்டால்மெண்டில் (installment) தலை சிறந்த நடிகையான சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) வருண் தவானுடன்(Varun Dhawan)  இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ இன்று உறுதி செய்திருக்கிறது.  இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ்  & DK. (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) தலைமையில் உருவாகி வருகிறது. அவர்கள்தான்  இந்தத் தொடரின் முதன்மைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள். 

இந்த தொடருக்கான கதையை ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர்.மேனன் (Sita R. Menon) எழுதியுள்ளார். இதன் தயாரிப்பு வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருவதையும் இதன் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக் குழுவினர் வட இந்தியாவிற்கும், பின்னர் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சர்வதேச படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்வார்கள் . இந்த இந்திய ஒரிஜினல் சிட்டாடலின் தொடரை உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்களால் கண்டுகளிக்க முடியும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.