டெல்லியில் பிரதமரை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்..!
தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது முதல் அரசுமுறை பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள உதயநிதி அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து பிரதமர் மோடியை சந்திப்பது இந்த பயணத்தின் அஜெண்டாவாக இருந்தது. மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் டெல்லி தமிழ்ச்சங்கத் தலைவர்களை சந்தித்தார். … Read more