மத்திய பட்ஜெட் 2023-24 | இந்தியாவின் வலிமைக்கான பட்ஜெட்: ஜி.கே.வாசன்

சென்னை: “இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என்பதும், நிதிப் பற்றாக்குறை குறைக்கப்படும் என்பதும் பட்ஜெட் உரையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பட்ஜெட்டை நடுநிலையோடு பார்த்தால் வரவேற்கத்தக்கதாக, பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கும் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் … Read more

வரிகள் முதல் சலுகைகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-24 சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சங்கள்: மத்திய பட்ஜெட்டில் சப்தரிஷி முன்னுரிமைகள்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி நபரையும் சென்றடைவது, முதலீடு மற்றும் கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, … Read more

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு: டிடிவி தினகரன் சொன்ன பிளாஷ் பேக்!

ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக மிக பலவீனமாகிவிட்டது. திமுக என்ற அரக்கணை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வைக்கலாம் அல்லது வேறு ஒரு இடத்தில் வைக்கலாம் சுற்றுச்சூழலை பாதித்து கடலில் வைக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்க ஜோதி இல்ல திருமண விழா நடைபெற்றது. … Read more

டெல்லி மேயர் தேர்தல்; 6ம் தேதி அழைப்பு விடுப்பு.!

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். முதல்முறை ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மை பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மேயர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் கூடியது. முதலில் … Read more

Thalapathy 67: தளபதி 67 படத்தில் நடிக்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற நடிகர்..இத்தனை கோடியா ?

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். வம்சியின் இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷுடன் இணைகிறார் தளபதி விஜய். இப்படத்தின் பூஜை டிசம்பர் மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. Thalapathy 67: விஜய்யால் தான் நான் மாறினேன்..வெளிப்படையாக பேசிய SAC … Read more

13 மணி நேரம் பயணம் செய்து புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம்.! எதிர்பாராத சம்பவம்

துபாயிலிருந்து நியூசிலாந்து நோக்கி புறப்பட்ட விமானம் 13 நேரம் பயணித்து மீண்டும் துபாயிலேயே தரையிறங்கியது. துபாயில் இருந்து நியூசிலாந்துக்கு சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன் பயணிகளுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் 13 மணி நேரம் பறந்து மீண்டும் துபாயில் தரையிறங்கியது. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது. துபாயில் இருந்து புறப்பட்டு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாய் – ஆக்லாந்து இடையேயான பயண தூரம் 16 … Read more

பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி 30% குறைப்பு! எதிர்க்கட்சிகள் கண்டனம்…

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  30% குறைதுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள கிராமப்புற ஏழை மக்களும்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme – MNREGS) என்றறியப்படும் மகாத்மா காந்தி … Read more

திருவள்ளூர் ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை சஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடக்கிறது. திருவள்ளூரில் பிரசித்தி  பெற்ற அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜீர்னோத்தாரணம் செய்து, வண்ணம் தீட்டி திருப்பணி நிறைவு பெற்று புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகாம முறைப்படி இன்று காலை 9 மணிக்கு மேல் … Read more

நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை. தேர்தலை மனதில் வைத்தே ஒன்றிய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லி: டெல்லி மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டுக்கு தொடரும் என்று பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் … Read more