தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது..!

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு TANCET மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். TANCET தேர்வுகள் மார்ச் 25 ஆம் தேதியும், CEETA தேர்வுகள் மார்ச் 26 அன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே கலந்தாய்விற்கும் … Read more

மத்திய பட்ஜெட் 2023-24 | “ஏமாற்றமே மிஞ்சுகிறது” – வைகோ கருத்து

சென்னை: “பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும் என்று கணித்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்?” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய பட்ஜெட் 2023-24 குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் … Read more

மத்திய பட்ஜெட் 2023-ல் ஏழைகளுக்கு ஏதும் இல்லை: காங்., திரிணமூல் காங். விமர்சனம்

புதுடெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”விரைவில் வரக்கூடிய 3, 4 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. இதேபோல், வேலைவாய்ப்பை பெருக்கவோ, காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்பவோ, … Read more

ஈரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறை

தெஹ்ரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஈரான் நீதிமன்றம் விதித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பொது சதுக்கத்தின் முன் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். மேலும், இந்த வீடியோவில் அஸ்தியாஜ், ஹிஜாப் அணியாமல் இருந்தார். ஈரானில் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடக் கூடாது என்று கூறப்படும் நிலையில், அஸ்தியாஜ் மற்றும் அமீர் முகமது … Read more

வேட்பாளரை இறக்கி ஓபிஎஸ் செக்… சிக்கலில் ஈபிஎஸ்.. முழிக்கும் அண்ணாமலை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள்ளேயே மும்முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்தது முதல் பாஜக – ஈபிஎஸ் தரப்பில் மனக்கசப்பு இருந்து வருகிறது. அதை சுதாரித்துக்கொண்ட ஓபிஎஸ் ” இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்று அறிவித்துவிட்டு உடனே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்துக்கொண்டார். அதே நாளில், எடப்பாடி தரப்பும் பாஜக அலுவலகத்தில் கால்கடுக்க காத்திருந்து பின்னர் அண்ணாமலையை சந்தித்து திரும்பினர். அதனை அடுத்து நேற்றைய தினம் … Read more

Kajal Aggarwal: மகனுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். காஜல் அகர்வால்தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு வெளியான Kyun! Ho Gaya Na.. என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் … Read more

Union Budget 2023: டெக்னாலஜி துறைக்கு என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!

டெக்னாலஜி துறை என்பது இந்தியாவில் இப்போது அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. குறிப்பாக வணிகம், வங்கிகள், தொலைத்தொடர்பு, அரசு வேலைகள், கல்வி துறை, விவசாயம் என அனைத்திலும் டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் நடக்கின்றன. இந்த டெக்னாலஜி துறையை மேலும் வளர்ச்சி பாதைக்கு மாற்ற இந்திய பட்ஜெட் 2023 நிகழ்வில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பட்ஜெட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான டெக்னாலஜி சார்ந்த அறிவிப்புகளை இந்த பதிவில் காணலாம். பொதுவான அடையாளம் வியாபாரம் நடத்தும் அனைவருக்கும் இனி … Read more

Tourism Budget 2023: சுற்றுலா துறையை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்

பட்ஜெட் 2023: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சுற்றுலாத்துறைக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோயின் போது கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட பிறகு சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறை தற்போது கணிசமான உயர்வைக் கண்டது. சுற்றுலாத் துறை … Read more

CBCID: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண  வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த நிலையில், அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை முறையாக நடத்தக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாணவி பெற்றோர் … Read more

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் சட்டம்: தடையாக நிற்கும் நடைமுறை பிரச்சினைகள்

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற உள்ளது. சட்டத்தால் வெளிநாட்டவர்களுக்கு என்ன நன்மை அந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். ஒருபடி மேலே போய், ஜேர்மன் மொழிப்புலமை, தன்னார்வலராக பணியாற்றுதல் மற்றும் கல்வியில் சிறந்துவிளங்குவோர் என ஜேர்மனியுடன் நல்ல முறையில் ஒருங்கிணைந்து வாழ்வோர் மூன்று ஆண்டுகளிலேயே கூட குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன் திறன்மிகுப்பணியாளர்கள், தங்களுக்கு ஜேர்மன் கல்வித்தகுதி, பணி அனுபவம் … Read more