புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு..!!

டெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் ஆரம்பம்

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். உயர்ந்தபட்ச ஈரப்பதன் 14 வீதத்தை கொண்ட உலர்ந்த நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் ஈரப்பதன் 14 வீதத்தைவிட கூடியதும் 22 வீதத்திற்கு குறைவானதுமான ஒரு கிலோ நெல் 88 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். பட்டினமும் சூழலும், கந்தளாய், பதவிஶ்ரீபுர, சேருவல, குச்சவெளி மற்றும் … Read more

#BREAKING:: வாணியம்பாடியில் கோர விபத்து.. கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்புகளை கடந்து சர்வீஸ் சாலையில் சென்றது. அப்பொழுது வளையம்பட்டு பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சர்விஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பள்ளி மாணவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 8ம் வகுப்பு படிக்கும் ரபீக், விஜய் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் சூர்யா ஆகியோர் … Read more

போதையில் மனைவியின் தம்பியை கொன்ற கணவன்!!

கோவையில் குடிபோதையில் மனைவியின் தம்பியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். இடையார்பாளையம் அடுத்த கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவருக்கு தங்கமாரி, செல்வி என 2 சகோதரிகள் உள்ளனர். மணிகண்டன் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் அடித்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் போதையில் தங்கமாரி வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து தங்கமாரி தனது மற்றொரு சகோதரி செல்வியின் கணவர் … Read more

கொடைக்கானலில் நாய்க் கண்காட்சி! விஜயகாந்த் மகன் விஜய்பிரபாகரன் வளர்க்கும் நாயும் இடம் பெற்றது!

மெட்ராஸ் கெனல் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான  நாய்கள் கண்காட்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் கலந்து கொண்டன. நாய் “கடந்த ஆண்டுவரை அரசு செலவு செய்து பராமரித்த குளத்தைக் காணவில்லை!” – விவசாயி குற்றச்சாட்டு! நாய்களின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வரிசையாக அழைத்து வந்து பார்வைக்கு வைத்தனர். இவ்வாறு அழைத்து … Read more

சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கிய நெல்லை சிறுமி

நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிறுமி ஒருவர், சிறைவாசிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தானமாக வழங்கினார். நெல்லை வல்லவன்கோட்டையை சேர்ந்த கொம்பையா – மாரிப்ரியா தம்பதியின் மகளான அந்த சிறுமியின் பெயர் யாஷிகா ஆகும். தனது 10வது பிறந்த நாளை புத்தக விழாவில் கேக் வெட்டி கொண்டாடியதோடு, சிறைவாசிகளுக்கு புத்தகங்களையும் சிறுமி தானமாக வழங்கினார். Source link

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவும், வகை வகையான புகார்களும் – ஒரு பார்வை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களின் ஆதார் அட்டையை, ஆவணமாக ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுத்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் தொடர்பாக ஆங்காங்கே நடந்த சம்பவங்கள் விவரம்: * வீரப்பன் சத்திரம் பகுதியில், 45-வது வாக்குச்சாவடி மையத்தில் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், சில நிமிடங்கள் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பழுது சரி செய்யப்பட்ட பின்பு … Read more

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை … Read more

Suriya42: ரூ. 500 கோடிப்பு: விஜய்யின் லியோ சாதனையை தவிடுபொடியாக்கிய சூர்யா 42?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு சூர்யா 42 என்று அழைத்து வருகிறார்கள். அந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். அப்டேட் கொடுப்பதில் சிவா எப்படிப்பட்டவர் என்பது அஜித் ரசிகர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். அதையே தான் சூர்யா விஷயத்திலும் செய்து வருகிறார். எந்த அப்டேட்டும் கொடுக்காமல் சத்தமில்லாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் … Read more