கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து..! 5 பெண்கள் உடல்நசுங்கி பலியான பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், 5 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் வீரப்பூர் வேடபுரி திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, தங்கள் சொந்த ஊருக்கு கார் மற்றும் டெம்போ வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். கரூர் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது அதை ஓட்டி வந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரவியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது … Read more

இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயரில் தெரு: சத்குரு வலியுறுத்தல்

கோவை: நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ இடம்பெற செய்ய வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து ‘உலக காஷ்மீரி பண்டிட் புலம் பெயர்ந்தோர் கூட்டமைப்பை’ தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் ஈஷா நிறுவனர் சத்குரு பேசும்போது, … Read more

காஷ்மீர் பண்டிட் இறுதிச்சடங்கில் குவிந்த பொதுமக்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தசஞ்சய் சர்மா என்பவர் தீவிரவாதிகளால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர்பக்கத்தில், “காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே சிறுபான்மையினரை பாஜக பயன்படுத்துகிறது” என பதிவிட்டுள்ளார். Source link

Vaathi: வாத்தி நாயகியிடம் தனுஷ் சொன்ன விஷயம்…சொன்ன மாதிரியே நடந்துடுச்சே..!

தனுஷ் பிஸியான நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை பல மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவராக இருந்து வருகின்றார் தனுஷ். கடந்தாண்டு மட்டுமே இவரது நடிப்பில் மாறன் , திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் என மூன்று திரைப்படங்கள் வெளியானது. மேலும் இந்தாண்டு துவக்கத்தில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த வாத்தி திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்சமயம் ஒரு தெலுங்கு … Read more

பாதிக்கப்பட்ட நாடுகளின் கடன் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குறித்த பீய்ஜிங்கின் சொல்லாட்சி நீண்ட காலமாக அதன் செயல்களை மீறிவிட்டதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த உரிமைகளை ஊக்குவிப்பதாகக் கூறும் சீன அரசாங்கம், அது இலங்கை உட்பட்ட பாதிக்கப்பட்ட நாடுகளில் கொண்டிருக்கும் நீடித்த கடனை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இலங்கை அரசாங்கத்துடன் எட்டிய 2.9 பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சீனாவின் … Read more

LEO Movie: 24 வயது பெண்ணிற்கு அப்பாவாக நடிக்கும் விஜய்?

லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்ட நட்சத்திர கூட்டங்களுடன் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.  இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  தற்போது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது, சமீபத்தில் தான் இயக்குனர் மிஷ்கின் படத்தில் தனக்கான காட்சிகளின் ஒரு பகுதியை நடித்து முடித்துள்ளார்.  ‘லியோ‘ படப்பிடிப்பு … Read more

தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு! மக்கள் அவதி!

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகரில் தினசரி 35 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் விநியோகம் 25000 லிட்டராக குறைக்கப்பட்டது பின்னர் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டதுடன், கால தாமதமாக வரும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்த தட்டுப்பாடு குறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் தூத்துக்குடியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இனிமேல் … Read more

லண்டன் மக்களை நடுங்கவைத்த சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள்

கிழக்கு லண்டனின் ரோம்ஃபோர்ட் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து மூன்று இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதல் ரோம்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Popeyes உணவகத்தில் ஏற்பட்ட கருத்து மோதலே, இறுதியில் கத்திக்குத்து தாக்குதலில் முடிந்துள்ளது. திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. @English38938960 அதிகாரிகள் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தாக்குதலில் இலக்கான மூவரும் 15, 16 மற்றும் 17 … Read more

முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் பிஜி 2023 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நுழைவுத் தேர்வு அசல் அட்டவணை யின்படி நடத்தப்படும் என கூறியுள்ளது. அதாவது மார்ச் 5. “முதல் சாளரத்தில், கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து மூவாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இன்டர்ன்ஷிப் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட பிறகு ஆறாயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ முதுநிலை தேர்வு வருகிற மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது

கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அசூர், பெரும்பாண்டி, கரிக்குளம் ஆகிய ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.