Ajith: அஜித்தால் மகிழ்திருமேனி எஸ்கேப்: ஏப்ரலில் வரும் அறிவிப்பு

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
AK 62 announcement: ஏ.கே. 62 படத்தில் இருந்து மகிழ்திருமேனியும் நீக்கப்படக்கூடும் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது.

​ஏ.கே. 62​அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தனர். இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
​அஜித்​Ajith, AK 62: மகிழ்திருமேனியையும் கழட்டிவிடும் அஜித்?: எஸ்கேப் டா மச்சினு விக்னேஷ் சிவன் ஹேப்பி?ஒன் லைனரை கேட்டு தான் மகிழ்திருமேனிக்கு ஓகே சொன்னாராம் அஜித். இந்நிலையில் ஃபைனல் ஸ்க்ரிப்ட்டை மார்ச் மாத இறுதிக்குள் தயார் செய்யவில்லை என்றால் மகிழ்திருமேனியையும் மாற்றிவிடலாம் என அஜித் முடிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் அதிகராப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் லைகா தாமதம் செய்கிறது என்றும் கூறப்பட்டது.

​அப்பா​அஜித்தின் அப்பா சுப்ரமணியம் மார்ச் 24ம் தேதி காலமானார். இதையடுத்து தன் பைக் டூர் திட்டத்தை தள்ளிப்போட்டுவிட்டாராம் அஜித். அதனால் ஏ.கே. 62 பட வேலையை அவசரமாக துவங்க வேண்டியது இல்லையாம். அதனால் இந்த மாத இறுதிக்குள் ஃபைனல் ஸ்க்ரிப்ட் தயாராகவில்லை என்றாலும் ஏ.கே. 62 படத்தில் இருந்து மகிழ்திருமேனி நீக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது.

​Ajith: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அப்பா தூக்கத்தில் இறந்தார்: அஜித், சகோதரர்கள் அறிக்கை​
​அறிவிப்பு​ஏ.கே. 62 பட அப்டேட் எப்பொழுது வரும் என எதிர்பார்த்து லைகாவின் ட்விட்டர் பக்கமே கதி என்று இருந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் ஏப்ரல் மாதம் அறிவிப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறதாம் லைகா. தந்தையை இழந்த சோகத்தில் இருக்கும் அஜித் எப்பொழுது நான் ரெடி என்று சொல்கிறாரோ அப்பொழுது படப்பிடிப்பை துவங்குவார்களாம்.
​மே மாதம்​தனக்காக படக்குழு காத்திருப்பதை விரும்ப மாட்டார் அஜித். அதனால் மே மாதமே அவர் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என பேச்சு கிளம்பியிருக்கிறது. முன்னதாக ஏ.கே. 62 படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் இயக்குநர் மாற்றப்பட்டதால் இந்த தீபாவளி தல தீபாவளியாக இருக்க வாய்ப்பே இல்லை.

​விஜய்​அஜித்தின் தந்தை இறந்த செய்தி அறிந்ததும் அவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் விஜய். இது நண்பரின் குடும்ப நிகழ்வு அதனால் நான் அஜித் வீட்டிற்கு செல்வது ரசிகர்கள் யாருக்கும் தெரியக் கூடாது. இது பப்ளிசிட்டியாக அமைந்துவிடக் கூடாது என தன் டீமிடம் கறாராக கூறினாராம் விஜய். அதனால் தான் அவர் அஜித் வீட்டிற்கு சென்றபோது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

​Vijay, Ajith: அஜித் வீட்டுக்கு செல்ல விஜய் போட்ட கன்டிஷன்: பாராட்டும் ஏ.கே. ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.