கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: பாஜக மாஸ்டர் பிளான்… காங்கிரஸ் அவ்வளவு தான்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜகவின் வியூகம் என்னவென்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1983 முதல் 2018 வரை ஒருமுறை கூட பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை. அதை மாற்றி காட்டும் அளவிற்கு சிறப்பான செயல்திட்டங்களை உருவாக்கி அக்கட்சி செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

டபுள் எஞ்சின் அரசு

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரிக்கையில், தனிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றால் ஓர் அரசு எந்த அளவிற்கு நலத்திட்டங்களை வழங்க முடியுமோ? அவ்வளவு சிறப்பான முறையில் கர்நாடகாவில் பாஜக அரசு செயல்பட்டுள்ளது. குறிப்பாக டபுள் எஞ்சின் முறையில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மக்களுக்கு களப்பணி ஆற்றியிருக்கிறது.

40 சதவீத கமிஷன்

40 சதவீத கமிஷன் கேட்கும் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் வேண்டுமானாலும் வியூகமாக கையிலெடுத்து செயல்படலாம். மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இந்த விஷயத்தை கட்டுமான சங்கங்கள் முன்வைத்திருப்பதாக சொல்லலாம். ஆனால் அவை எந்த அளவிற்கு உண்மை என்பதை கவனிக்க வேண்டும். திருத்தி கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்ள கட்சிகள் தயாராக உள்ளன.

வளர்ச்சி திட்டங்கள்

ஆனால் மக்களைப் பொறுத்தவரையில் வளர்ச்சி திட்டங்களை தான் கவனிப்பர். பெங்களூரு மாநகரம் சிலிக்கான் சிட்டி எனப் பெயர் வாங்கியுள்ளது. உலக அளவில் ஐடி துறையின் முக்கிய நகராக விளங்கி வருகிறது. பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் உலகத் தரம் வாய்ந்த 10 வழிச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதேபோல் பெங்களூரு – சென்னை இடையிலான சாலையும் சிறப்பான வசதிகளை கொண்டிருக்கிறது.

பெங்களூரு மெட்ரோ

நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ திட்டமாக பெங்களூரு மெட்ரோ உருவெடுத்துள்ளது. அடுத்தகட்ட புதிய வழித்தடங்களில் மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பெங்களூரு நகரம் அதிநவீன போக்குவரத்து வசதிகள் கொண்ட நகரமாக விரைவில் மாறிவிடும். தும்கூரில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை, ஷிமோகாவில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி

மைசூரு நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதால் ஐடி நிறுவனங்கள் பலவும் அங்கு படையெடுத்து வருகின்றன. இதேபோல் எத்தனை வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பதை சித்தராமையா மற்றும் பாஜக ஆட்சியில் ஒப்பிட்டு பார்த்தால் தெரிந்து விடும். இலவச திட்டங்களை அறிவித்தே ஆட்சிக்கு வந்துவிடலாம் என
காங்கிரஸ்
கட்சி கனவு காண்கிறது.

மீண்டும் எடியூரப்பா

அது ஒருபோதும் நடக்காது. கர்நாடக பாஜகவை எடியூரப்பாவை தவிர்த்து விட்டு பார்க்கவே முடியாது. அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் பிரச்சாரக் குழுவில் முக்கிய நபராக டெல்லி தலைமை சேர்த்துள்ளது. அவரது மகன் விஜயேந்திராவிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்வில் எடியூரப்பாவிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒக்கலிகா, லிங்காயத்து ஆகிய சமூக வாக்குகளை பெறும் வண்ணம் முஸ்லீம்களின் 4 சதவீத உள் ஒதுக்கீட்டை வாங்கி தலா 2 சதவீதமாக வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் பெருமளவு கைகொடுக்கும் என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.