தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம்

பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் உலகெங்கும் வெளியானது . அந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். டிக்கெட் வைத்திருந்தபோதும் திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதற்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்பை தெரிவித்து வந்தனர். பின்னர் தியேட்டர் நிர்வாகம் அதுபற்றி ஒரு விளக்கம் அளித்ததோடு அவர்களை படம் பார்க்க அனுமதித்ததாகவும் ஒரு வீடியோ வெளியிட்டது. இருப்பினும் இந்த விவகாரம் தீண்டாமை பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல் வெளியிட்ட பதிவு : ‛‛டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது'' என பதிவிட்டுள்ளார்.

வெற்றிமாறன் வெளியிட்ட கண்டன பதிவில், ‛‛நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.