எனர்ஜியோடு எக்ஸாம் எழுதலாமா! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை. அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்க வேண்டும் பெற்றோரின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் … Read more

காய்ச்சல் வந்தால், 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறும் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார். சென்னை நந்தனம் அரசு மாதிரி பள்ளியில், அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பிற்காக, நடமாடும் பல் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்கும் புன்னகை திட்டத்தை, அமைச்சர்கள் … Read more

சுங்கச் சாவடியை மூடச் சென்ற எங்களை அரசு தடுப்பது ஏன்? – தி.மலையில் கே.பாலகிருஷ்ணன் காட்டம்

திருவண்ணாமலை: “தமிழகத்தில் சுங்கச் சாவடி அமைத்து மக்களிடம் பாஜக அரசு கொள்ளையடிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இனாம்காரியந்தல் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று (9-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “நாடு முழுவமும் தேசிய நெடுஞ்சாலைகளில் … Read more

உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிர தாக்குதல்

கீவ்: உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்ய படை இன்று தீவிர வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், பல நாட்களுக்குப் பிறகு தீவிர தாக்குதலில் ரஷ்யா மீண்டும் இறங்கியுள்ளது. வியாழக்கிழமை காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரஷ்ய … Read more

அதானியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? துறைமுகங்களின் வருவாய் பாதிப்பு!

நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில் அதானியின் பங்கு மிகப் பெரிய அளவில் இருப்பதால் துறைமுகங்களின் வருவாய் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இது அந்நிய நாட்டு உறவையும் பாதிக்கும். எனவே மத்திய அரசு அதானியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அதானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அகில இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர் சம்மேளன … Read more

‘பயமா..எனக்கா..?’ – பிரதமர் மோடிக்கு சவால் விட்ட தெலங்கானா முதல்வர் மகள்.!

விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ். பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க அவர் முயன்றுவருகிறார். இந்தநிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த ஊழலில் தெலங்கான முதல்வரின் மகள் கவிதாவிற்கும் … Read more

Ajith, Vijay: அஜித் ஓகே, ஆனால் விஜய் பற்றி இப்படி சொல்லிட்டாரே எதிர்நீச்சல் மாரிமுத்து!

Thalapathy Vijay, Ajith: அஜித்துக்கும், விஜய்க்கும் இடையேயான வித்தியாசம் பற்றி எதிர்நீச்சல் மாரிமுத்து கூறியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ​மாரிமுத்து​எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக மிரட்டி வருகிறார் மாரிமுத்து. சீரியலை விட அவர் கொடுத்து வரும் பேட்டிகள் பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் பற்றி பேசியிருக்கிறார் மாரிமுத்து. அஜித்தின் நல்ல குணம், விஜய்யின் கெட்ட குணத்தை பற்றி அவர் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ​அஜித்​அஜித் பற்றி மாரிமுத்து கூறியதாவது, அடுத்தவர்கள் செய்யும் … Read more

தனக்கு தானே கல்லறை கட்டிய பிரபல தமிழ்ப்பட நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்ப்பட நடிகை ரேகா தனக்கு தானே கல்லறை கட்டிய விடயம் மீண்டும் வைரலாகியுள்ளது. நடிகை ரேகா புன்னகை மன்னன், கடலோரக் கவிதைகள் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகை ரேகா. கதாநாயகியாக தமிழ், மலையாளப் படங்களிலும், குணச்சித்திர வேடத்தில் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரேகா, சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார். தனக்கு தானே கல்லறை தன் மீது அதீத அன்பு கொண்ட ரேகா, … Read more

அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறை: நகரமைப்புத் துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

கரூர்: கரூர் அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழ்நாடு நகரமைப்புத் துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பூரைச் சார்ந்த தனியார் துணி நிறுவனம் அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறை அமைத்து அதன் கழிவுகளை அமராவதி ஆற்றில் கலந்து வருகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதுடன், சட்டவிரோதமாக அனுமதியும்  பெறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்த்து தெரிவித்து கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் சாயப்பட்டறை கட்டடத்தை … Read more

திருவண்ணாமலை அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

திருவண்ணாமலை: மலைப்பாம்பாடி கிராமம் அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் பேருந்தை இயக்கியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.