பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலி..!
கோயம்புத்தூர் மாவட்டம் நல்லூரில், பிரிட்ஜ் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவ்விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை அயனாவரம் காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சபரிநாத் என்பவர், விடுதியில் தங்கி படித்துவரும் தனது மகனை காண, விடுப்பில் சொந்த ஊர் சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் அவர் இருந்த போது, சமையல் செய்வதற்காக சாந்தி என்ற பெண் சென்ற நிலையில், பயங்கர சத்தம் ஏற்பட்டதாகவும், … Read more