Month: March 2023
புதிய பாதை 2வை இயக்கி, நடிக்கும் பார்த்திபன்
1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான படம் ‛புதிய பாதை'. திரையுலகில் பார்த்திபனுக்கு புதிய அடையாளத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்த படம் இது. 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கப் போகிறார் பார்த்திபன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛புதிய பாதை படம் எப்போதுமே என் மனதுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு படமாகும். அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். … Read more
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்க துறை விசாரணை
புதுடெல்லி, டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் சி.பி.ஐ. காவல் … Read more
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் புகுந்த திருடர்கள்; லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் கொள்ளை
கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நடப்பு ஆண்டின் ஜனவரி 3-ந்தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில், தனது மனைவியுடன் ஹபீஸ் வெளியே சென்றிருந்தபோது, நள்ளிரவில் அவரது வீட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒன்று உள்ளே புகுந்து உள்ளது. இதன்பின்னர், வீட்டில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை திருடி சென்று விட்டது. இதுபற்றி அறிந்து, அவரது மாமனாரான சாஹித் இக்பால் என்பவர் போலீசில் புகார் அளித்து … Read more
சீனா, ஈரான் உள்பட 4 நாடுகள் அச்சுறுத்தலாக இருக்கும்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷியா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தி வாய்ந்த ஒன்றாகவும், உலக அரங்கில் பெரிய ஆற்றல் வாய்ந்த நாடாகவும் சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் சக்தியாக உள்ள சீனாவை எதிர்கொள்வதற்கான … Read more
இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!
தமிழக அரசின், 2023 – 24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வரும், 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்நிலையில், இன்று மாலை, 5:00 மணிக்கு, தமிழக அமைச்சரவை கூட்டம், தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். இக்கூட்டத்தில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதித்து, அமைச்சரவை ஒப்புதல் … Read more
கணவருடன் போட்டி, 70 கிலோ ஜேசிபி டயரை 8 முறை அசால்ட்டாகத் தூக்கிப்போட்ட அஜிலா!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் `இரும்பு மனிதன்’ கண்ணன். இவர் லாரியைக் கட்டி இழுப்பது, இரண்டு பைக்குகளை தூக்கிச் சுமப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார். அடுத்ததாக, ரயில் மற்றும் விமானத்தை கட்டி இழுக்கும் லட்சியத்தை மனதில் வைத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் பஞ்சாபில் நடந்த ’ஸ்ட்ராங் மேன்’ போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் ஜிம் பயிற்சியாளராகவும் உள்ளார். அஜிலாவுடன் அவரது கணவர் … Read more
வட மாநில தொழிலாளர் விவகாரம் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் குழு – டி.ஜி.பி சைலேந்திரபாபு
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் கூட்டமைப்பினருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். வட மாநில தொழிலாளர் விவகாரம் குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்துள்ளதாக டி.ஜி.பி கூறினார். Source link
ஓசூர் பகுதியில் கொத்தமல்லி விலை சரிவு: ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை
ஓசூர்: ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குறைந்த நாட்களில் அதிக வருவாய் ஈட்டும் காய்கறி பயிர்களான பீன்ஸ், கேரட் , தக்காளி, புதினா, கொத்தமல்லி, கீரை வகைகளை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கிறது. குறிப்பாக கொத்தமல்லியின் தேவை ஆண்டு முழுவதும் இருக்கும் என்பதால் சந்தையில் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பும், விலையும் கிடைக்கும். இந்நிலையில், தற்போது திருமணம் … Read more
காலியாகுமா ஓபிஎஸ் கூடாரம்? அணி மாறிய ஈரோடு கிழக்கு வேட்பாளர் செந்தில் முருகன்
அணி சார்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகனும், இபிஎஸ் அணி சார்பாக கே.எஸ்.தென்னரசுவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் தென்னரசு போட்டியிட வழிவிட்டு ஓபிஎஸ் தனது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற வைத்தார். கட்சிக்காக இக்கட்டான நேரத்தில் போட்டியிட முன்வந்து … Read more