அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி, ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை; அரசு பள்ளியில் நுழைவு தேர்வு கிடையாது, மாணவர்கள் குறும்படம் எடுக்க பயிற்சி அக்கப்படும், மாணவர்களை ஹாலிவுட் அழைத்து செல்ல திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். சென்னையில், மாணவர்கள் குறும்படங்களை எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு … Read more

திருப்பரங்குன்றம் அருகே கண்மாயில் மனித எலும்புகள்!: போலீசார் எலும்புகளை சேகரித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பினர்

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கண்மாயில் மனித எலும்பு கூடு மிதப்பதை கண்டு அங்கு குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பரங்குன்றம் அடுத்த நிலையூர் அய்யனார் கோவில் கண்மாயில் மனித மண்டை ஓடு, விலா எலும்பு, கை, கால் எலும்புகள் அங்கங்கே கரை ஒதுங்கி கிடந்தன. இதனை கண்டு அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் எலும்பு கூடுகளை கைப்பற்றி தடைய அறிவியல் … Read more

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரம் இல்லை என இந்திய அரசியலைப்பு சட்டம் கூறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் சீன செல்போன்களை பயன்படுத்த தடை

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 11 கம்பெனிகளின் சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதல்  சம்பவத்திற்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன  ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல்  ஏற்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ரீதியிலான பதற்றம்  நிலவிவரும் சூழலில், சீனத் தயாரிப்பு … Read more

வெங்காய விலை வீழ்ச்சி தடுக்க அரசு நடவடிக்கை| Government action to prevent fall in onion prices

புதுடில்லி : குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் நேரடியாக இன்று முதல் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துஉள்ளது. குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு வெங்காயம் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக இவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வரை கொள்முதல் செய்த நிலையில் … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் வழங்கியாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் வழங்கியாக வேண்டும்: அமைச்சர் ரகுபதி Source link

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.! 40 வயது நபருக்கு 14 ஆண்டுகள் சிறை.!

அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (40). இவர் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், … Read more

23 ஆண்டுகளாக வணிகவரித் துறையினருக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வணிகவரித் துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது. வணிகவரித் துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே … Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ – `Scripted’ என தமிழக காவல்துறை எச்சரிக்கை

சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள், அரசியல் வட்டாரங்களில் சலசலப்புகள் தொடர்ந்து வந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பேசி, வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதிபடுத்தினர். மேலும், வதந்திகள் பரப்பிய சிலரையும் காவல்துறை கைது செய்ய முனைப்பு காட்டியது. तेजस्वी यादव जी चश्मा हटा के इस फोटो को देखिए मजदूरों के चेहरे पर घाव … Read more