ஆன்லைன் ரம்மி தடை சட்டம் -ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்..!

தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மியால் இதுவரை 18 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற பாமகவின் 2.0 பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் ஆயிரம் பேருந்துகளை தனியார் மையம் ஆக்குவதை விட 3500 பேருந்துகளை வாங்கி இலவசமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.     Source link

பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.71.81 கோடியில் கட்டப்பட உள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல்நாட்டினார். முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை அவரது தொகுதியான கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குச் சென்றார். ஜவகர் நகர் 1-வது சர்க்குலர் சாலையில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் அருகில், பொதுமக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில், தரை மற்றும் 3 தளங்களுடன் 1.18 லட்சம் … Read more

டெல்லிக்கு அடுத்தபடியாக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, மும்பை

புதுடெல்லி: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு லாப நோக்கமின்றி செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சிஎஸ்இ) கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் நாட்டின் 6 பெரு நகரங்களில் காற்று மாசு பற்றி ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 6 பெருநகரங்கள் வெவ்வேறு புவி-காலநிலை மண்டலத்தில் அமைந்திருந்தாலும், நடந்து முடிந்த குளிர் காலத்தில் காற்று மாசு (PM2.5) அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருந்துள்ளது. இதில் … Read more

Dhanush: நான் நம்பிய 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க… உருக்கமாக பேசிய தனுஷ்!

தான் நம்பிய 4 பேரில் 3 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாக உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ்தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது 19 வயதில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ், கடந்த 20 ஆண்டுளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள தனுஷ் தெலுங்கு, மலையாளம், இந்தி என கலக்கி வருகிறார். ​ Nayanthara: முதல் … Read more

முதலில் வருவோருக்கு முன்னுரிமை! இன்று முதல் இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுற்றோட்டம் செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஞாபகார்த்த நாணய குற்றிகளை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று (09.03.2023) முதல் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அந்த நாணயக் குற்றிகளில் ஒன்றை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக 6,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் … Read more

இம்ரான்கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு.. தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் நடவடிக்கை..!

பாகிஸ்தானில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான் கான் ஆதரவாளர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் அப்புறப் படுத்தினர்.  இம்ரான் கான் ஆட்சியின் போது கலைக்கப்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட மாகாண சட்டபேரவைகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரச்சாரப் பேரணியை நடத்த திட்டமிட்ட இம்ரான்கான் ஆதரவாளர்கள், லாகூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கூடினர். அப்போது, காவல்துறையினர் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தியபோது, மோதல் வெடித்தது. இதில், இரு … Read more

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியாவை அடுத்து கவிதாவை கைது செய்ய அமலாக்கத் துறை திட்டமா?

நாளை மறுநாள் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளான கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கப்படுவதாக கவிதா தெரிவித்துள்ளார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இன்று ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆனால் கூடுதல் அவகாசம் கோரி தாம் நாளைமறுநாள் ஆஜராகப் போவதாக கவிதா தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள கவிதாவின் இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கவிதாவை கைது … Read more

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி

அமெரிக்காவில் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினை விமர்சித்தவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. 56 வயதான Sergey Grishin ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர் மட்டுமின்றி, @thesun அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொடர்பு கொண்டு, தமக்கு பாதுகாப்பு வேண்டும், அமெரிக்க கடவுச்சீட்டு ஒன்றை அனுமதியுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது மூளைக்கு … Read more

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாகவும், வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்  டிஜிபி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டி, வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வதந்தியாக பரவி வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், தமிழ்நாட்டின் தொழிற்நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வதந்திகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விளக்கங்களை அளித்ததுடன், … Read more