குஜராத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி | பார்வையாளர்களாக மாறிய இரு நாட்டு பிரதமர்கள்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டு வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். இரு நாடுகளும் … Read more

தாய் மொழியில் குற்றப் பத்திரிக்கை கோரி மனு: மறுத்த நீதிமன்றம்!

குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்கள் தாய்மொழியில் வழங்க வேண்டும் என உரிமையாகக் கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – ஹைதராபாத் நெடுஞ்சாலையில் செம்பு தகடுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி, அதை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் சரவணன், ஸ்ரீகாந்த ஆகியோரை இரும்பு கம்பி கொண்டு தாக்கி கொலை செய்து, கூடூரில் உள்ள பாமபலேறு நதியில் வீசிச் சென்றது தொடர்பான வழக்கை கிருஷ்ணகிரி சிபிசிஐடி … Read more

Vijay: ஓடும் ரயிலில் ஏறி 40 பேர் எங்களை அதற்காக அடித்தார்கள்..விஜய் சொன்ன திடுக்கிடும் தகவல்..!

தமிழ் சினிமாவின் தளபதி கடந்த சில வருடங்களாக அவ்வளவாக பேட்டிகள் கொடுக்காமல் இருந்துவருகிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பீஸ்ட் படத்திற்காக விஜய் சன் டிவியில் பேட்டி கொடுத்தார். இதுதான் கடந்த 10 வருடங்களில் விஜய் கொடுத்த ஒரே பேட்டி. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் பல பேட்டிகளை கொடுத்துள்ளார். அதில் சகஜமாக பல விஷயங்களை விஜய் பகிர்ந்தும் இருக்கின்றார். அதுபோல தான் விஜய் சில வருடங்களுக்கு முன்பு பங்கேற்ற ஒரு பேட்டியில் திடுக்கிடும் … Read more

உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.09 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.07 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.39 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது

சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸி. பிரதமர் அல்பானிசுக்கு டிவிட்டரில் மோடி வரவேற்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசை டிவிட்டரில் வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஆவலுடன் இருப்பதாக கூறி உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்த அவர் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று பிரதமர் மோடியும், அல்பானிசும் அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா, … Read more

கருகலைப்பு தண்டனை கனடாவில் நீக்கம்| Abortion decriminalization in Canada

ஒட்டாவா : ‘கனடாவில் கருகலைப்புக்காக தண்டனை பெற்றவர்கள் மீதான குற்றங்கள் நீக்கப்படும்’ என அந்நாட்டு அரசு அறிவித்தது. வட அமெரிக்க நாடான கனடாவில் கருகலைப்புகள் மீதான தடைகள் 1988ல் நீக்கப்பட்டது. ஓரின சேர்க்கையாளர்கள் மாற்று பாலினத்தவர்கள் திருநங்கையர் சந்தித்து நேரம் செலவிட பிரத்யேக விடுதிகள் நடத்துபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வந்தன. இது 2019ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கருகலைப்பு மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான விடுதி நடத்தியதற்காக தண்டனை பெற்றவர்கள் மீதான … Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி தொழிற் சந்தை

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் பாரிய தொழிற் சந்தை (mega career fair)யை மாவட்டச் செயலக வளாகத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தொழிற் சந்தைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் (08) இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது குறித்த தொழிற்சந்தையில் பங்குபெறும் அரச திணைக்களங்கள், கற்கை நெறிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழகுநர்கள் … Read more