மகளிர் தினத்தில் அரசு அறிவித்த கிப்ட்..!!

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது . இது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்திற்கான தற்போதைய போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. இந்நிலையில் கேரள பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 6 மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஆறு மாதங்கள் … Read more

“திமுக ஆட்சிக்கு எதிராக சதி; முதல்வர் சொன்னது உண்மைதான்” – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை … Read more

பாஜக ஐ.டி. பிரிவில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் ராஜினாமா

சென்னை: பாஜகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேலும் 13 நிர்வாகிகள் நேற்று ராஜினாமா செய்துள்ளனர். பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சிடிஆர்.நிர்மல்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜகவில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து தகவல் தொழில் நுட்பப் பிரிவு … Read more

பெண்களுக்கு மேலும் அதிகாரம் – மகளிர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வாழ்த்து செய்தியில், பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சர்வதேச மகளிர் தினத்தில், நமது பெண் சக்திகளின் சாதனைகளை பாராட்டுகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நாம் மிகவும் போற்றுகிறோம். பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும். … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா – இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம்

புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டதற்கு இந்தியாவே காரணம் என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மக்களின் கொந்தளிப்பால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினர். அந்தச் … Read more

நிலக்கரி வாங்கியதில் 908 கோடி ஊழலா? மறுக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி

“நான் அதிமுக அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்” என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார். அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நாமக்கல்லில் நேற்று (8-3-2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நான் … Read more

Viduthalai: வாடிவாசல் & வடசென்னை 2 வருமா ? வராதா ? வெற்றிமாறனின் பதில் இதுதான்..!

சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக அறிவித்தார். அதிலிருந்து அனைவரது பார்வையும் வெற்றிமாறனின் மீது தான் திரும்பியது. இப்போ எடுத்த சார்பட்டா படத்திற்கே இரண்டாம் பாகம் உருவாகப்போகுது, ஆனால் ஐந்து வருடத்திற்கு முன்பு வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வருமா ? வராதா ? என தனுஷ் ரசிகர்கள் வெற்றிமாறனை கேட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான பதிலை வெற்றிமாறன் அளித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் துவங்கி தான் இயக்கிய … Read more

லண்டனில் நவாஸ் ஷெரீப்பின் ஆடம்பர வாழ்க்கை.. விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்ததாக கண்டனம்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து நாட்டில் விலை உயர்ந்த பொருட்களை ஷாப்பிங் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வரும் வீடியோ காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஐஎம்எப்பிடம் பாகிஸ்தான் கடன் கேட்டு வரும் சூழலில், அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரரான நவாஸ் ஷெரீப்  விலை உயர்ந்த காரில் பயணித்து, லண்டனில் உள்ள கடையில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் குவித்ததாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். Source link

தாம்பரம்-நெல்லை கோடைகால சிறப்பு ரயிலுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது

சென்னை: தாம்பரம்-நெல்லை கோடைகால சிறப்பு ரயிலுக்கு இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஏப். முதல் தொடர்ச்சியாக 13 வாரங்கள் தாம்பரம்-நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஞாயிறுதோறும் இரவு 7.20க்கு நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

நீலகிரி: நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கண்ணதாசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.