2 இதயம், 4 கைகள், 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை.. பிறந்து 20 நிமிடங்களில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி 19 வயதுள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணுக்கு அடுத்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பின் 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்த குழந்தை, பின்னர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் … Read more

பெண் பிள்ளைகளில் இந்த மாற்றம் தெரிகிறதா? கனேடிய பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் பாலியல் தொழில் குழுக்களிடம் தங்கள் பிள்ளைகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெற்றோர்களுக்கு எச்சரிக்கை கனேடியரான Michelle Furgiuele என்பவரே தமது வாழ்க்கையில் நடந்த கொடூரங்களை குறிப்பிட்டு, தற்போது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது 15 வயதில் அப்படியான ஒரு குழுவிடம் சிக்கி, வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக கூறும் Michelle Furgiuele என்பவர், சில அறிகுறிகளையும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். @ctvnews அப்படியாக குழுக்களிடம் இருந்து தப்பி … Read more

ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை அமல்படுத்தியது இந்தியன் ரயில்வே!

டெல்லி: ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை  இந்தியன் ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ரயில் பெட்டி களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,  ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,  பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் ரயிலில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.   … Read more

நாகையில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்; சிபிசிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மெய்யனாதன் பேட்டி

நாகை: நாகையில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன் கடந்த 2-ம் தேதி திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல் நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் … Read more

இயக்குனர் சுசிகணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது: காவல்துறை தகவல்

சென்னை: இயக்குனர் சுசிகணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது என காவல்துறை தெரிவித்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை அளித்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் பொய் என அம்பலமானது. உயிருக்கு ஆபத்து எனில் சுசி கணேசன்தான் காரணம் என லீனா மணிமேகலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். லீனா மணிமேகலை காழ்புணர்ச்சியால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் பலி

பீகார்: கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் ஷெல் குண்டு பாய்ந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பல்கலை மாணவியருக்கு 6 மாத பேறுகால விடுப்பு | 6 months maternity leave for university students

திருவனந்தபுரம், :கேரள பல்கலையில், மாணவியருக்கு ஆறு மாத பேறுகால விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உயர் கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், மாணவியருக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுஇருந்தார். மாதவிடாய் விடுப்பு உட்பட 73 சதவீத வருகைப் பதிவு இருந்தால் போதும் என்றும் … Read more

என் பெயரில் வாய்ப்பு தருவதாக மோசடி; வலிமை வில்லன் எச்சரிக்கை

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் பெயரில் போலியாக கணக்குகள் துவக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் அவ்வப்போது தங்கள் வேலையை காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் தனது பெயரில் சோசியல் மீடியாவில் கணக்கு துவங்கப்பட்டு சினிமாவில் விளம்பர படங்களில் நடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என கூறி மோசடி நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மலையாள திரை உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமான தினேஷ் பிரபாகர், … Read more

பாகிஸ்தானிய உளவாளிகளுடன் தொடர்பு, அசாமில் 10 பேர் கைது; 200 சிம் கார்டுகள் பறிமுதல்

நகாவன், அசாம் மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை பரவியது. இதனை தொடர்ந்து திங் மற்றும் பததிராவா பகுதிகளில் நகாவன் நகர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, சந்தேகத்திற்கு உரிய வகையிலான 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அளித்த தகவலின் பேரில் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள், பாகிஸ்தானை சேர்ந்த உளவாளிகளுக்கு சிம் கார்டுகளை வினியோகித்து … Read more

கடைசி டெஸ்ட் போட்டியை நேரில் காணும் இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள்..!

ஆமதாபாத், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இது ஒரு லட்சத்து 32 ஆயிரம் … Read more